ஆபரேஷன் சிந்தூர் வெற்றி: பா.ஜ.க சார்பில் தேசியக்கொடி ஊர்வலம்!

Update: 2025-06-01 17:48 GMT

ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாடும் விதமாக ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா முழுவதும் பாஜக சார்பில் மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் தமிழகத்திலும் பல்வேறு மாவட்டங்களில் தேசியக்கொடி ஏந்தி ராணுவ வீரர்களுக்கும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசிற்கும் நன்றி தெரிவித்த தேசிய கொடிய அணிவகுப்பு பேரணி பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது மதுரையிலும் இதன் ஒரு பகுதியாக ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் தேசியக்கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது.


ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாடும் விதமாக ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் பா.ஜனதாவினர் தேசியக்கொடி ஏந்தி ஊர்வலம் நடத்தி வருகின்றனர். சமயநல்லூர் மண்டலம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் மாநிலபொதுக்குழு நிர்வாகி பழனிசாமி, மாவட்ட செயலாளர்கள் ஜெயபாண்டி, சிவசங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மண்டல நிர்வாகி சிவராமன் நன்றி கூறினார்.இதே போல் தேனூரில் பா.ஜனதாவினர் தேசியக்கொடி ஏந்தி ஊர்வலமாக சென்றனர்

Similar News