சாவர்க்கர் ரத்த சம்பந்த உறவுகள் குறித்த கேள்வி: ராகுல்காந்தி மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்!

Update: 2025-06-01 17:53 GMT

மக்களவை எதிர்க்கட்சிதலைவர் ராகுல்காந்தி 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் லண்டனில் பேசும்போது. இந்துத்வா தலைவர் சாவர்க்கர் அவரது புத்தகத்தில், ஒரு முறை நண்பர்களுடன் சேர்ந்து இஸ்லாமியர் ஒருவரை தாக்கியதாகவும், அதற்காக மகிழ்ச்சி அடைந்ததாகவும் எழுதி உள்ளதாக கூறியிருந்தார். ஆனால் சாவர்க்கர் அப்படி எதுவும் புத்தகத்தில் எழுதவில்லை என புனேயை சேர்ந்த சாவர்க்கரின் பேரன் சத்யாகிசாவர்க்கர் புனே மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ராகுல்காந்திக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார்.


இந்த வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில் சமீபத்தில் ராகுல்காந்தி, மனுதாரர் சத்யாகி சாவர்க்கரின் தாய் வம்சாவளி குறித்து தகவல்களை தெரிவிக்கவேண்டும் என கூறியிருந்தார். இதை விசாரித்த மாஜிஸ்திரேட்டு அமோல் ஷிண்டே, மனு தாரரின் தாய் வம்சாவளி குறித்த விவரங்களை கேட்ட ராகுல் காந்தியின் மனுவை தள்ளுபடி செய்தார். இதுகுறித்து மாஜிஸ் திரேட்டு கூறுகையில், "இந்த வழக்கு லண்டனில் ராகுல்காந்தி, சாவர்க்கர் குறித்து பேசியது தொடர்பானது மனுதாரரின் தாய் ஹிமானி அசோக் சாவர்க்கரின் குடும்பம் குறித்த தகவல் பற் றியது அல்ல" என்றார். 

சத்யாகி சாவர்க்கரின் தாய் ஹிமானி சாவர்க்கர் மகாத்மா காந்தியை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த நாதுராம் கோட்சேவின் தம்பி விநாயக் கோட்சேவின் மகள் ஆவார். இதேபோல ராகுல்காந்தியின் ஜாமீனை ரத்து செய்யவேண்டும் என்ற சத்யாகி சாவர்க்கரின் மனுவையும் மாஜிஸ்திரேட்டு தள்ளுபடி செய்தார்.

Similar News