பிரம்மாண்டமாக காட்சி தரும் செனாப் ரயில் பாலம்: பிரதமர் மோடி பெருமிதம்!

Update: 2025-06-06 17:34 GMT

பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் அடையாளச் சின்னமாக உள்ள செனாப் ரயில் பாலத்தில் மூவண்ணக் கொடியை ஏற்றி வைத்தார். இது நாட்டின் மகத்தான பெருமையின் தருணமாக உள்ளது என்றும், மிகவும் சவாலான பகுதிகளில் எதிர்காலத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்கும், நாட்டின் அதிகரித்து வரும் திறனுக்கும் சான்றாக திகழ்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, "செனாப் ரயில் பாலத்தின் மீது மூவண்ணக் கொடி உயரமாகப் பறக்கிறது. இந்தப் பாலம் நாட்டின் லட்சியம் மற்றும் செயலாக்கத்தை ஒருங்கிணைப்பதில் பெருமிதம் கொள்ளச்செய்கிறது. இதுபோன்ற மிகவும் சவாலான பகுதிகளில் எதிர்காலத்திற்கான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதில் நாட்டின் வளர்ந்து வரும் திறனை இது பிரதிபலிக்கிறது" என கூறினார்.

Similar News