கோவை சின்னியம்பாளையம் பிளேக் மாரியம்மன் கோவில் அம்மன் சிலை உடைப்பு:சமூகப் பதற்றம் ஏற்படுத்துவதே நோக்கமா?
கோவையில் உள்ள பிளேக் மாரியம்மன் கோவில் சிலைகள் சுக்குநூறாக உடைக்கப்பட்டிருக்கும் செய்தி பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் தமிழக பாஜக நிர்வாகி அண்ணாமலை புகழ்பெற்ற கோவை சின்னியம்பாளையம் பிளேக் மாரியம்மன் கோவிலில் ஜூன் 17 நேற்று இரவு சமூக விரோதிகள் புகுந்து, நூற்றாண்டு கால பழமையான சிலைகளை உடைத்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்தப் பகுதி மக்கள் காலங்காலமாய் வணங்கி வரும் அம்மன் ஆலயத்தின் சிலைகளை உடைத்து சமூகப் பதற்றம் ஏற்படுத்துவதே நோக்கமாகத் தெரிகிறது
உடனடியாக கோவில் சிலைகளை உடைத்த சமூக விரோதிகளை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் இதன் பின்னணியில் யார் உள்ளனர் என்பதையும் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்