காவல்துறைக்கான பதவி உயர்வுக்கான காலத்தை குறைக்கிறேன் என்ற பெயரில் புதிய அரசானையால் காவலர்களை வதைக்கிறது திமுக அரசு:நயினார் நாகேந்திரன்!

Update: 2025-06-18 15:38 GMT

கடந்த ஜூன் 12 ஆம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்த காவல்துறை மானிய கோரிக்கையின் அறிவிப்பின்படி காவலர்களுக்கான நிலை உயர்த்துதல் காலத்தை 10+5+10 ஆண்டுகளில் இருந்து 10+3+10 ஆண்டுகளாக திருத்தம் செய்யப்பட்டது இந்த திருத்தம் முடிவு செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் எனவும்  தெரிவிக்கப்பட்டது இந்த திருத்தத்திற்கு பல தரப்பில் எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது ஏனென்றால் இந்த அரசாணை தலைமை காவலர்களாகவும் சிறப்பு சார் ஆய்வாளர்களாகவும் பதவி உயர்வு பெற்றவர்களுக்கு பொருந்தாது என்பது காவலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது 

இதற்கு தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் போதிய ஓய்வு இல்லாமலும், விடுமுறை இல்லாமலும் காவலர்கள் தவித்து வரும் நிலையில் தற்போது காவல்துறைக்கான பதவி உயர்வுக்கான காலத்தை குறைக்கிறேன் என்ற பெயரில் புதிய அரசாணை பிறப்பித்து, 2011-ஆம் ஆண்டுக்கு முன் பணியில் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான காவலர்களுக்கு சிறப்புக் காவல் உதவி ஆய்வாளராகப் பதவி உயர்வு கிடையாது என மேலும் வதைத்துள்ளது திமுக அரசு

கடந்த 2021-ஆம் ஆண்டு அறிவித்த காவல்துறையில் பணி உயர்வு பெறுவதற்கான தகுதி காலம் குறைக்கப்படும் எனும் தேர்தல் வாக்குறுதியை நெடுங்காலமாக கிடப்பில் போட்டு காலந்தாழ்த்தி விட்டு இப்போது அரசாணை பிறப்பிக்க காரணம் இன்னும் ஓர் ஆண்டில் தேர்தல் வருவதனாலா?அல்லது 37,000-க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு பதவி உயர்வு வழங்காமல் ஏமாற்றி செலவைக் குறைக்கலாம் எனும் எண்ணமா?என்று மக்கள் மனதில் சந்தேகம் எழுந்துள்ளது

திராவிட மாடல் ஆட்சியில் திசை எட்டும் கொலை கொள்ளை என சட்டம் ஒழுங்கின் சுவடு தேய்ந்து வரும் நிலையில் இப்படி காவலர்களின் பணி நியமன ஆண்டை கருத்தில் கொண்டு பதவி உயர்வில் பாரபட்சம் காட்டினால் காவலர்களின் பணித்திறன் பாதிக்கப்பட்டு மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும் எனவே 2011-ஆம் ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்தவர்களுக்கும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராகப் பதவி உயர்வு கிடைக்கும்படி அரசாணையை மாற்றி அமைக்க வேண்டும் என மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன் என கூறியுள்ளார் 

Tags:    

Similar News