ஊடகவியலாளர் மீது கடுமையான தாக்குதல்: அண்ணாமலை கண்டனம்!

Update: 2025-07-12 16:04 GMT

ஊடகவியலாளர் மீது தாக்குதல் சம்பவம் தொடர்பாக அண்ணாமலை கண்டனம் பெறுவது இருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறும் பொழுது, "விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நடைபெற்ற மதிமுக கூட்டத்தில், அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் திரு. வைகோ அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே, கூட்டத்தில் இருந்த தொண்டர்கள் வெளியேறியதைப் படம்பிடித்த ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தும்படியும், அவர்கள் கேமராக்களைப் பறிமுதல் செய்யும்படியும், வைகோ அவர்கள் கூறியிருக்கிறார்.

இதனை அடுத்து, அங்கிருந்த மதிமுக தொண்டர்கள், ஊடகவியலாளர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். இதனால், பல ஊடக நண்பர்களுக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஒரு மூத்த அரசியல் தலைவரான வைகோ அவர்கள், சிறிதும் பொறுப்பற்ற முறையில், ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தக் கூறியிருப்பதும், ஊடகவியலாளர்கள் மதிமுக கட்சித் தொண்டர்களால் தாக்கப்பட்டதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

வைகோ அவர்கள், பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களிடம் நிச்சயம் நேரில் வருத்தம் தெரிவிக்க வேண்டும். அவர்கள் மீது தாக்குதல் நடத்திய மதிமுக கட்சியினர் மீது, காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என அவர் கூறி உள்ளார்.

Similar News