தி.மு.க.,வை கலங்கடிக்க போகும் ஒரு லட்சம் போஸ்டர்கள்.!

தி.மு.க.,வை கலங்கடிக்க போகும் ஒரு லட்சம் போஸ்டர்கள்.!

Update: 2020-12-20 08:40 GMT

தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு கட்சிகள் தங்கள் பிரச்சார வியூகத்தை ஒவ்வோரு விதமாக வகுத்து வருகின்றன. இந்த நிலையில் தி.மு.க'வுக்கு எதிராக ஒரு லட்சம் போஸ்டர் மற்றும் கையேடுகளை அச்சடித்து விநியோகிக்க அ.தி.மு.க., தரப்பு தயாராகி உள்ளதால் தி.மு.க தரப்பு அதிர்ச்சியடைந்து உள்ளது.

தமிழகப் போக்குவரத்துத் துறையில் வாகனங்களுக்கு 'ஸ்டிக்கர்' ஒட்டுவது, ஜி.பி.எஸ் கருவிகள், கண்காணிப்பு கேமராக்கள் வாங்கியது முறைகேடு நடந்து விட்டதாக தி.மு.க தரப்பில் மு.க.ஸ்டாலினும், முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் செந்தில் பாலாஜி எல்லாம் குற்றம் சுமத்தி கொண்டு இருக்கிறார்கள்.

இந்த நிலையில் கே.என் நேரு தி.மு.க'வின் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது செய்த முறைகேடுகள், ஊழல்கள், இளைஞர்களுக்கு வேலை வழங்க வாங்கிய பணம் போன்ற அனைத்து விவரங்களையும் திரட்டி மொத்தமாக போஸ்டர் வடிவிலும் மற்றும் கையேடு புத்தகமாகவும் வெளியிட அ.தி.மு.க தரப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

மேலும் இந்த போஸ்டர்களை கே.என்.நேரு மற்றும் செந்தில் பாலாஜி ஆகியோர் போட்டியிடும் தொகுதி முழுவதும் விநியோகிக்கவும் திட்டமிட்டுளதை தொடர்ந்து தி.மு.க தரப்பு பயந்து வருகிறது. ஏனெனில் ஏற்கனவே தி.மு.க என்றால்  ஊழல், திருட்டு மட்டும்தான் மக்களுக்கு நினைவுக்கு வரும் நிலையில் இந்த துறை வாரியான முறைகேடுகள் போஸ்டரின் விளைவுகள் மேலும் வாக்குகளை பதம் பார்த்துவிடும் என்பதே தி.மு.க'வின் பயத்திற்கு காரணமாகும்.

Similar News