அப்போது மட்டும் தி.மு.க-வினருக்கு இனித்ததா? 39 எம்.பி.க்கள் இருந்து என்ன பிரயோஜனம்? அமைச்சர் சீனிவாசன் பளார்!

அப்போது மட்டும் தி.மு.க-வினருக்கு இனித்ததா? 39 எம்.பி.க்கள் இருந்து என்ன பிரயோஜனம்? அமைச்சர் சீனிவாசன் பளார்!

Update: 2020-12-16 08:53 GMT

ஆட்சி கவிழ்ப்பு முயற்சி தவிடு பொடியாகி விட்டதால் ஓட்டுக்காக ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் கபட நாடகம் ஆடுகின்றனர் என்று அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.

மத்திய அரசு விவசாயிகளுக்காக வேளாண் திருத்த மசோதா திட்டத்தை கொண்டு வந்துள்ளது. அதில் விவசாயிகளின் நலனுக்காக பல அம்சங்கள் உள்ளதால் கழக அரசு ஆதரிக்கிறது. ஆனால் தி.மு.க.வோ கருப்புக்கொடி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நாங்களும் இருக்கிறோம் என்பதை காட்டிக் கொள்வதற்காகவே தி.மு.க. போராட்டம் நடத்தியுள்ளது. அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய இடம் நாடாளுமன்றத்தில் தான். 39 எம்.பி.க்களை வைத்துள்ள தி.மு.க. இச்சட்டத்திற்கு எதிராக அங்கு பேச வேண்டியதுதானே? தமிழ்நாட்டில் ஏன் கருப்புக்கொடி காட்டுகிறார்கள்.

கடந்த 2016-ம் ஆண்டு தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் வேளாண் சட்டம் கொண்டு வருவோம் என குறிப்பிடப்பட்டுள்ளதை ஊடகங்கள் வெட்ட வெளிச்சமாக்கி உள்ளன. ஆனால், தற்போது பாரதப் பிரதமர் மோடி கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்திருத்தை தி.மு.க. எதிர்ப்பது வேடிக்கையாக உள்ளது.

பா.ஜ.க. வுடன் கழகம் கூட்டணி வைத்துள்ளதை மதவாத அரசியல் என்கிறார் ஸ்டாலின். பா.ஜ.க. வுடன் கூட்டணி வைத்துள்ளதால் கழகம் கிறிஸ்தவர்களுக்கு எதிரி, இஸ்லாமியர்களுக்கு எதிரி என பொய்யான பிரச்சாரத்தை திமுக பரப்பி வருகிறது.

பா.ஜ.க. வுடன் தி.மு.க. கூட்டணி அமைத்து வாஜ்பாய் மந்திரி சபையில் பங்கேற்றபோது தி.மு.க. வினருக்கு இனித்ததா? மத்திய அரசு நல்லது செய்கிறது என்றால் கழகம் அதனை பாராட்டும். மத்திய அரசோடு இணக்கமாக இருந்ததால் தான் தமிழகத்திற்கு 11 மருத்துவ கல்லூரிகள் உட்பட ஏராளமான திட்டங்கள் வரப் பெற்றுள்ளன.

Similar News