தமிழகத்தில் பாலக்கோடு தொகுதியில்தான் வாக்குப்பதிவு அதிகம்.!

அதிகபட்சமாக தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு சட்டமன்ற தொகுதியில் 87.33 சதவீதமும், குறைந்த வாக்கு எண்ணிக்கையில் வில்லிவாக்கம் தொகுதயில் 55.52 சதவீதம் வாக்குகளும் பதிவாகியுள்ளது.

Update: 2021-04-07 07:24 GMT

தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் நேற்று முடிவடைந்த நிலையில், தமிழகத்திலேயே பாலக்கோடு தொகுதியில்தான் வாக்குகள் அதிகமாக பதிவாகியுள்ளது.

தமிழ்நாட்டில் 234 தொகுதிகள் உள்ளது. நேற்று அனைத்து தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. வெயில், கொரோனா தொற்றை பொருட்படுத்தாமல் அனைவரும் தவறாமல் வாக்களித்து சென்றனர். குறிப்பாக கிராமங்களில் உள்ள அனைத்து மக்களும் தவறாமல் கலந்து கொண்டு வாக்களித்தனர். ஆனால் நகரத்தில் உள்ள மக்கள் பெரும்பாலும் வாக்களிக்க செல்லவில்லை. இதில் சென்னை நகரம் முன்னணியில் உள்ளது.




 


ஒட்டு மொத்தமாக நேற்று மாலை 7 மணி நிலவரப்படி 71.79 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்திருந்தார்.


 



இந்நிலையில், இன்று காலை ஒட்டுமொத்த வாக்குப்பதிவு விபரம் பற்றிய தகவலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தில் மொத்தமாக 72.78 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு சட்டமன்ற தொகுதியில் 87.33 சதவீதமும், குறைந்த வாக்கு எண்ணிக்கையில் வில்லிவாக்கம் தொகுதயில் 55.52 சதவீதம் வாக்குகளும் பதிவாகியுள்ளது.

Similar News