"மக்கள் தி.மு.க அரசுக்கு முடிவுரை எழுதும் காலம் வந்துவிட்டது" - அண்ணாமலை சுளீர்
'மக்கள் தி.மு.க அரசுக்கு விரைவில் முடிவுரை எழுதுவார்கள்' என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
'மக்கள் தி.மு.க அரசுக்கு விரைவில் முடிவுரை எழுதுவார்கள்' என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண் ஒருவர் தன்னுடைய நிலத்தை அபகரிக்க முயல்வதாக புகார் கூறி தீக்குளிக்க முயன்ற வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவியது. இந்த விவகாரத்தை குறிப்பிட்டு அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில் தி.மு.க அரசை விமர்சித்திருந்தார்.
மேலு இது குறித்து அவர் கூறியதாவது, தி.மு.க நிர்வாகியிடம் இருந்து அந்த 4,000 சதுர அடி நிலத்தை மீட்க போராடும் இந்த குடும்பம் எடுத்த முடிவு தீக்குளிப்பு. விளம்பரம் மட்டுமே மூலதனமாகக் கொண்டு இயங்கும் தி.மு.க அரசுக்கு மக்கள் விரைவில் முடிவுரை எழுதுவார்கள்" என அந்த பெண் தீக்குளிக்க முயன்ற வீடியோவை பதிவிட்டு கமெண்ட் செய்திருந்தார்.