வி.சி.க.விடம் 4 எம்.எல்.ஏ. இருக்காங்க.. போலீஸை சூடேற்றிய வக்கீலுக்கு காத்திருந்த அதிர்ச்சி.!

இந்த சம்பவத்தை தொடர்ந்து வக்கீல் காளிதாஸ் மீது போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 200 ரூபாய் பணத்தை கட்டிவிட்டு சென்றிருந்தால் தற்போது வழக்கு வந்திருக்குமா என அப்பகுதியினர் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Update: 2021-07-27 08:07 GMT

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது ஹெல்மெட் மற்றும் முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்து வந்தனர்.

அப்போது அந்த சாலை வழியே விசிகவை சேர்ந்த காளிதாஸ் என்பவர் வந்துள்ளார். அவரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தபோது, ஹெல்மெட் மற்றும் முககவசம் எங்கே என போலீஸ் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது தான் ஒரு வக்கீல் எனவும், எங்ககிட்ட 4 எம்.எல்.ஏ., இருக்கின்றனர். எங்க வாகனத்தையே நிறுத்துவியா என போலீசாரிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டார்.

இதனை தொடர்ந்து காளிதாஸை போலீசார் காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது முககவசம் அணியாததற்கு ரூ.200 கொடுத்துவிட்டு, தான் வீட்டுக்கு சென்று வாகனத்தின் ஆவணங்களை எடுத்து வருவதாக கூறிவிட்டு மீண்டும் காவல் நிலையம் திரும்பவில்லை என கூறப்படுகிறது.

Similar News