ஸ்டாலினுக்கு பதவி வெறி! எதையும் செய்யத்துடிக்கும் பணபலம் - முகத்திரையை கிழித்த முதல்வர்!

ஸ்டாலினுக்கு பதவி வெறி! எதையும் செய்யத்துடிக்கும் பணபலம் - முகத்திரையை கிழித்த முதல்வர்!

Update: 2021-01-14 06:41 GMT

எந்தெந்த துறையில் ஊழல் என்று ஸ்டாலினால் சொல்ல முடியுமா என்று ஸ்டாலினுக்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி சவால் விடுத்துள்ளார்.

நான் முதலமைச்சராக பொறுப்பேற்று 3 ஆண்டுகள் 10 மாதங்கள் ஆகின்றது. நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற போது திமுக தலைவர் ஸ்டாலின், கட்சியை உடைக்க முயற்சித்தார். ஆட்சியை கலைக்க நினைத்தார். இது உங்கள் அத்தனை பேருக்கும் தெரியும். அதை எல்லாம் மக்களின் துணையோடு தகர்த்து, இந்தியாவிலேயே சிறப்பான ஆட்சி உங்களின் ஆதரவோடு நடைபெற்று கொண்டிருக்கிறது.

சில நாட்களுக்கு முன்பு ஸ்டாலின் கழகம் மூன்றாக உடைகிறது என்று பேசுகிறார். அடுத்த கட்சியை உடைத்து தான் வர வேண்டும் என்று நினைக்கின்ற ஸ்டாலின் எப்படிப்பட்ட சுயநலவாதி என்று பாருங்கள். உழைத்து முன்னேறுவது எல்லாம் கிடையாது. குறுக்கு வழியை கையாண்டு, அதன்மூலம் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று நினைக்கும் ஸ்டாலினுக்கு வருகின்ற தேர்தலில் மக்கள் தகுந்த பாடத்தை கற்பிக்க வேண்டும்.

திமுக தலைவர் ஸ்டாலின் எப்பொழுது பார்த்தாலும் தான் முதலமைச்சராக ஆக வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருக்கிறார். முதலமைச்சர் பதவி என்ற வெறியோடு இருக்கிறார். இத்தகைய பதவி வெறியோடு இருப்பவரிடம் ஆட்சியை கொடுத்தால் நாடு துண்டாகி விடும்.

திமுகவில் குடும்ப வாரிசு அரசியல் நடந்து வருகிறது. கருணாநிதிக்கு பிறகு ஸ்டாலின், ஸ்டாலினுக்கு பிறகு உதயநிதி. ஏன் இவர்களுக்கு மட்டும் தான் பட்டா போட்டு இருக்கிறதா?

பழனிசாமி ஒரு விவசாயி, அவருக்கு ஒன்றும் தெரியாது, அவரை எப்படியாவது வீட்டிற்கு அனுப்பி விடலாம் என்று தப்பு கணக்கு போட்டார் ஸ்டாலின். நான் பதவியேற்றபோது, இந்த ஆட்சி 10 நாட்களில் போய்விடும், ஒரு மாதத்தில் போய்விடும், ஆறு மாதங்களில் போய்விடும் என்று சொன்னார். ஆனால் மக்களின் துணை கொண்டும், கழகத்தின் துணை கொண்டும் நான்கு ஆண்டுகளாக வெற்றிகரமாக கழகத்தின் ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த நாட்டை ஆளக்கூடிய தகுதி இந்த நாட்டிலே பிறந்த ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு. அதை யாரும் மறுக்க முடியாது.

ஸ்டாலின் வேண்டுமென்றே திட்டமிட்டு கழக ஆட்சியில் ஊழல் ஊழல் என்று தவறான குற்றச்சாட்டுகளை பரப்பி வருகிறார். நான் சவால் விடுகிறேன். எந்ததெந்த துறையில் என்னென்ன நடந்திருக்கிறது. நீங்கள் (ஸ்டாலின்) கேட்கிற கேள்விகளுக்கு நான் பதில் சொல்கிறேன்.

நான் கேட்கிற கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லுங்கள். இந்த ஆட்சியின் மீது எந்த குறையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் பொய் குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறார். எங்களுக்கு மடியில் கனம் இல்லை. அதனால் வழியில் பயம் இல்லை. இந்திய திருநாட்டிலே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரு அரசாங்கம் என்றால் அது திமுக அரசாங்கம் தான். அதனால் உங்களுக்கு ஊழலை பற்றி பேசுவதற்கு தகுதி கிடையாது என்று கூறியுள்ளார்.

Similar News