கட்சிக்குள் வெடிக்கும் பிரளயம்.. காரணம் பிரசாந்த் கிஷோர்?

கட்சிக்குள் வெடிக்கும் பிரளயம்.. காரணம் பிரசாந்த் கிஷோர்?

Update: 2020-11-21 06:30 GMT

கடந்த சில வாரங்களாகவே அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், திரிணாமுல் கட்சி விவகாரங்களில் அதிக ஆதிக்கம் செலுத்துவதாக அக்கட்சியின் மூத்த மற்றும் இடைப்பட்ட த் தலைவர்கள், செயல்பாட்டாளர்கள் பலரும் பகிரங்கமாகவும் தனிப்பட்ட முறையிலும் தங்களுடைய கோபத்தை வெளிப்படுத்திய வண்ணம் உள்ளனர். 

2021 ஆம் ஆண்டில் மூன்றாவது முறையாக மேற்குவங்க தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள உதவுவதற்காக, 400 கோடி ரூபாய் கொடுத்து பணியமர்த்தப்பட்டதாகக் கூறப்படும் பிரசாந்த் கிஷோரைக் குறித்து அவர் வெளிமாநிலத்தவர் அல்லது வெளியாள் என்று குறை கூறுவது எளிதாக இருக்கலாம். ஆனால் இக்கோபத்தின் உண்மையான இலக்கு, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி தான் என்று கூறப்படுகிறது. மம்தா பானர்ஜி உடனான சொந்தம் என்பது ஒன்றுதான் அவருடைய ஒரே தகுதி.

 திரிணாமூல் காங்கிரஸில் அபிஷேக் பானர்ஜி சடாரென்று வளர்ந்தது, பல வேறு அரசியல் தலைவர்களின் அரசியல் லட்சியங்களை பஸ்மமாக்கி விட்டது. இது கட்சிக்குள் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியது.

 அபிஷேக்கை சுற்றியுள்ள ஒரு கும்பல் தங்களுக்கு வேண்டியவர்களை கட்சியின் அடிமட்டத்திலிருந்து மேலே சிபாரிசுகள் செய்து அழைத்துக் கொண்டனர். இதனால் கட்சியில் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த பலர் ஓரங்கட்டப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக 18 இடங்களை பெற்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியளித்தது. இதனையடுத்து பீதியடைந்த மம்தா பானர்ஜி தனது  தனது மருமகன் அபிஷேக் பானர்ஜி மூலமாக சரிந்து வரும் தனது செல்வாக்கை நிலைநிறுத்த பிரசாந்த் கிஷோரரை அரசியல் ஆலோசகராக சேர்த்துக் கொண்டார்.

 மம்தா பானர்ஜியிடம், பிரசாந்த் கிஷோரை அழைத்துச் சென்றது அவரது மருமகன் அபிஷேக் பானர்ஜி தான். அங்கே மூடிய கதவுடன் சந்திப்பு நிகழ்ந்தது. அங்கே அவர்கள் மூன்று பேர் மட்டுமே ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பைத் தொடர்ந்து இருந்து பிரசாந்த் கிஷோர் மம்தா பானர்ஜியுடன் ஒரு சில சந்திப்புகளை நடத்தி உள்ளார். ஆனால் மூத்த தலைவர்கள் கூட அந்த கூட்டங்களில் இருந்து வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. அபிஷேக் மட்டுமே அந்தக் கூட்டத்தில் இருந்திருக்கிறார். இதனால் கட்சியில் பெரிய நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டது. ஏனெனில் அபிஷேக் பானர்ஜிக்கு அரசியல் அனுபவமும் திறமையும் மிகக் குறைவாக இருப்பதாக அவர்கள் கணிக்கிறார்கள்.

கிஷோர் தனது கீழிருக்கும் அணியை இந்திய அரசியல் நடவடிக்கைக் குழுவிற்கு (IPAC)  வேலை செய்ய, நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் பெண்களை வங்காளத்தில் பணியமர்த்தினார். கிஷோரின் நேரடி மேற்பார்வையில் கீழ் செயல்படும் முக்கிய IPAC குழுவில் பல உள்ளூர் இளைஞர்களை நியமித்தனர்.

 'திதி கே போலோ' போன்ற கிஷோர் வடிவமைத்த திட்டங்களை செயல்படுத்த அரசின் முழு இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டன. அதேசமயம் திரிணாமுல் கட்சியிலிருந்து, தனியாக ஒரு அமைப்பை உருவாக்கப்பட்டு, பல்வேறு அரசாங்கத் திட்டங்கள் மற்றும் அவை செயல்படுத்தப்படுவது குறித்து மக்களிடம் இருந்து கருத்துக்களை அமைப்பு பெறுகிறது. மேலும் தனிப்பட்ட திரிணாமுல் தலைவர்களின் செயல்பாடுகளும், பணிகளும் குறித்த கருத்துக்களும் பெறப்படுகின்றன.

இதன் முடிவுகள் அனைத்தும் திரிணாமுல் தலைவரிடம் தவறாமல் சமர்ப்பிக்கப்படுகின்றன. அவரைத் தவிர இந்த முடிவுகள் அனைத்தையும் அபிஷேக் பானர்ஜி மட்டுமே பார்க்கிறார்.

 IPAC சேகரித்த மற்றும் தொகுத்தக் கருத்துக்களின் அடிப்படையில் மம்தா பானர்ஜி தவறாக செயல்படும் செயற்பாட்டாளர்களை பணி நீக்கம் செய்தும், கண்டித்தும் வருகிறார் .கிஷோரின் பரிந்துரைகளின் அடிப்படையில் தற்போது எம்எல்ஏக்கள் ஆக,  அமைச்சர்களாக இருக்கும் சிலருக்கு, தேர்தல் சீட்டு கூட 2021ல் கிடைக்காமல் போகலாம் என்ற வதந்தி பரவி வருகிறது. இது பல தலைவர்களுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. 

இதில் பல எம்எல்ஏக்கள், மற்ற மாநிலங்களை சேர்ந்த இளைஞர்களால் வங்காளத்தில் பல உண்மைகளை தெரிந்து கொள்ள முடியாது என்றும் அவர்களுக்கு அரசியல் அனுபவம் இல்லை என்றும் புகார் கூறி வருகின்றனர். ஒரு சில எம்எல்ஏக்கள் கூறுகையில் தங்கள் கட்சிக்குள் போட்டி மற்றும் பொறாமை பிடித்தவர்கள் ஒரு சில எம்எல்ஏக்களை பற்றி தவறாக கருத்துக்கள் வருமாறு பார்த்துக் கொள்வதாகவும், இதன் மூலம் குறிப்பிட்ட எம்எல்ஏக்களை பற்றிய தவறான கருத்துக்கள் மம்தா பானர்ஜிக்கு சென்றடைந்தால் அவர்களுக்கு சீட்டு கிடைக்காமல் போகலாம் என்று அஞ்சுகிறார்கள்.

பெரும்பாலான திரிணாமுல் தலைவர்களின் சமூக ஊடக கணக்குகளை IPAC நிர்வகித்து வருகிறது. அந்த தலைவர்களுக்கு தங்கள் கணக்கில் இருந்து என்ன போஸ்ட் செய்யப்படுகிறது என்பது கூட அவர்களுக்குத் தெரியவில்லை.

 மேலும் கிஷோரின் நம்பகமான ஆட்கள் திரிணாமுலில் சேரக் கோரி, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்களை அணுகி வருகிறார்கள். அவர்கள் கூறும் முக்கியமான ஒன்று, உங்களுக்கு எம்எல்ஏ சீட்டு தருகிறோம் என்பது தான். இது ஏற்கனவே அந்த தொகுதியில் இருக்கும் எம்எல்ஏக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. மற்ற கட்சிகளின் பல தலைவர்கள் IPACஉடன் பேச்சுவார்த்தை நடத்த கூட தயாராக இல்லை என்பது வேறு விஷயம். 

 பிரசாந்த் கிஷோர் பற்றி அவர்கள் குறை கூறும் போதும் அவர்களுடைய முக்கியமான இலக்கு அபிஷேக் பானர்ஜி தான். அபிஷேக் தனது தவறுகளையும் குறைகளையும் மறைக்கவே பிரசாந்தை அழைத்து வந்ததாக அவர்கள் நம்புகிறார்கள். கடந்த ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன்னர் வடக்கு வங்காளத்தில் பல தொகுதிகளில் திரிணாமுல் வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்யும் பொறுப்பு அபிஷேக்கிற்கு வழங்கப்பட்டது. ஆனால் அவர் பரிதாபமாக தோல்வி அடைந்தார்.

 பா.ஜ.க, வடக்கு வங்காளத்தில் இருந்த பெரும்பாலான இடங்களை பெற்றது. எனவே தன் மீதான அத்தை கோபத்திலிருந்து தப்பிக்க பிரசாந்த் கிஷோரை இழுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

 கிஷோர் கட்சிக்கு எந்த நன்மையும் செய்யாமல் நிறைய தீங்கு செய்வதாக உயர் மட்டத் தலைவர் ஒருவர் கூறுகிறார். அவர் கூறுகையில், "ஒரு அனுபவமுள்ள அரசியல்வாதிக்கு ஒரு ஆலோசகர் தேவையில்லை. இதே போல் கிஷோர் வடிவமைத்து வரும் திட்டங்கள் தேவையற்றவை.பிற மாநிலங்களில் இருந்து அரசியல் சார்பற்ற இளைஞர்களால் நிர்வகிக்கப்படும் இந்த செயற்கை திட்டங்களுக்கு எந்த அர்த்தமும் இல்லை" என்றார்.

பல MLA க்கள், கிஷோருக்கு எதிராக வெளிப்படையாக பேசி பேசியுள்ளனர். அதே சமயம், அபிஷேக் பானர்ஜியை ராகுல் காந்தியுடன் ஒப்பிட தொடங்கியுள்ளனர். அபிஷேக்கை குறிவைத்து தாக்கி வரும் திரிணாமுல் தலைவர் சுவெந்து ஆதிகாரி என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்பதை திரிணாமுல் கட்சியில் பலர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர் கட்சியிலிருந்து விலகினால், குறைந்தது 10 முதல் 15 எம்எல்ஏக்கள் அவரை பின் தொடர்ந்து வெளியேறுவார்கள்.

 கட்சியில் அபிஷேக்கின் எழுச்சியை  கோபமாக விமர்சித்து வருகிறார் சுவேந்து. மேலும் தனது மருமகனுக்கு தகுதியற்ற முக்கியத்துவத்தையும் வழங்கியதற்காக மம்தா பானர்ஜி மீது அதிருப்தி அடைந்துள்ளார். இவரை மம்தா பேனர்ஜி சமாதானப்படுத்த மிகவும் தாமதமாக முயற்சிக்க ஆரம்பித்தார். ஆனால் அவர் அனுப்பி வைத்த தூதர் பிரசாந்த் கிஷோர் என்பதால் இம்முயற்சி மோசமாக முடிந்தது.

 திரிணாமூலில் தவறாக சமீபத்தில் நடந்து வரும் பல விஷயங்களுக்கு அபிஷேக்கும், பிரசாந்த் கிஷோரும் தான் காரணம் என்று  தலைவர்கள் கூறி வருகிறார்கள். அது சரி செய்யப்படும் வரை, அபிஷேக்கின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு, கிஷோரின் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் வரை, அடுத்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரசிற்கு பெரிய இழப்பு காத்திருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். 

Translated From: Swarajya

Similar News