சென்னை வரும் பிரதமர் மோடி.. அதிமுக, பாஜக கூட்டணி பிரச்சாரத்தை தொடங்கி வைக்கிறார்.. பயத்தில் எதிர்க்கட்சிகள்.!

சென்னை வரும் பிரதமர் மோடி.. அதிமுக, பாஜக கூட்டணி பிரச்சாரத்தை தொடங்கி வைக்கிறார்.. பயத்தில் எதிர்க்கட்சிகள்.!

Update: 2020-11-25 11:51 GMT

மத்திய மற்றும் மாநில அரசு திட்டங்களை துவக்கி வைப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, அடுத்த மாதம் சென்னைக்கு வரஉள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சில நாட்களுக்கு முன்னர் சென்னைக்கு வந்திருந்தார். அப்போது அரசு திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அடுத்த ஆண்டு நடைபெறும் தமிழக சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., பா.ஜ.க., கூட்டணியை உறுதி செய்வதற்கான ஆலோசனையையும் மேற்கொண்டார்.
இந்நிலையில், பிரதமர் மோடிக்கு, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தை தமிழக அமைச்சர் ஒருவர் டெல்லி சென்று பிரதமரிடம் நேரில் கொடுத்துள்ளார்.


கடித்தில், தமிழகத்தில், மத்திய மற்றும் மாநில அரசுகளின் 4  திட்டங்களை துவக்கி வைக்க, சென்னைக்கு வரவேண்டும் என பிரதமருக்கு முதலமைச்சர் அழைப்பு விடுத்திருந்தார். தமிழக முதல்வரின் அழைப்பை ஏற்கும்படி, பிரதமரிடம், அமித் ஷாவும் பரிந்துரைத்தாக தெரிகிறது. இதையடுத்து சென்னைக்கு அடுத்த மாதம் வர, பிரதமர் மோடி சம்மதித்துள்ளார். இதற்கான தேதி, மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின் முடிவு செய்யப்படும் என தெரிகிறது.


சென்னைக்கு பிரதமர் வரும்போது தமிழகத்தில், அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணியின் பிரசாரத்தை இணைந்து துவக்கும் வகையில், பிரமாண்ட கூட்டத்தை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையால், எதிர்கட்சியான திமுக தற்போது இருந்தே பயத்தில் உள்ளது. எங்கே ஸ்டாலின் முதல்வர் கனவு நிறைவேறாதா என்றெல்லாம் பேச துவங்கி விட்டனர். தற்போது பிரதமர் தமிழகத்திற்கு வரவுள்ளதால் அனைத்து எதிர்க்கட்சிகளும் பயத்தில் உள்ளனர் என அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
 

Similar News