தமிழை உயிர் மூச்சாய் நினைக்கும் பிரதமர் - பீகார் சட்டசபையில் நுழையும் தமிழ் தெரிந்த பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள்!

தமிழை உயிர் மூச்சாய் நினைக்கும் பிரதமர் - பீகார் சட்டசபையில் நுழையும் தமிழ் தெரிந்த பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள்!

Update: 2020-11-16 09:16 GMT
பிரதமர் நரேந்திர மோடி எப்போது வாய்ப்பு கிடைத்தாலும், தமிழ் மொழியைப் மட்டும் அதிக முக்கியத்துவம் அளித்து, அதனை அனைவரிடத்திலும் பாராட்டி பேசி வருகின்றார். பொது இடங்களிலும் சரி, கட்சி தொடர்பான ஆலோசனையிலும் சரி திருக்குறளின் பெருமையை மேற்கோள் காட்டி பேசி வருவார். மேலும், வருகின்ற தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரத்தில், தமிழிலேயே சில நிமிடங்கள் மோடி பேசுவார் அதற்காக அவர் தமிழை கற்று வருகிறார் என்று ஊடகங்களில் செய்திகள் வெளிவருகிறது.

இந்நிலையில், பீகார் சட்டசபைக்கு, பா.ஜ.க-விலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய எம்.எல்.ஏ.,க்களில் மூன்று பேர் தமிழ் நன்றாக பேசக் கூடியவர்கள். இவர்கள், ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் தமிழகத்தில் கோவை, மதுரை, போன்ற இடங்களில் பணியாற்றியுள்ளனர். இவர்களுக்கு தமிழ் நன்றாக பேசும் திறமையுள்ளவர்கள். தற்போது இவர்கள் சட்டசபையில், தமிழில் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

இவர்களும் பிரதமரைப் போன்று திருக்குறள் மற்றும் தமிழின் பெருமையை சட்டசபையில் எடுத்துச் சொல்வர் என்கின்றனர் பா.ஜ.க நிர்வாகிகள். எது எப்படியோ தமிழ் மொழியை நாடு முழுவதும் இன்றி உலகம் முழுவதும் எடுத்து செல்வதில் பிரதமர் மோடிக்கு நிகர் வேறு யார் இருக்க முடியாது என்றே சொல்லலாம்.


 

Similar News