ஆன்மீகத்தை நம்புறவங்களுக்கு ரஜினியின் ஆதரவு.. பா.ஜ.க., தலைவர் எல்.முருகன் கருத்து.!

ஆன்மீகத்தை நம்புறவங்களுக்கு ரஜினியின் ஆதரவு.. பா.ஜ.க., தலைவர் எல்.முருகன் கருத்து.!

Update: 2021-01-11 14:42 GMT

நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் நிலைப்பாட்டை தெளிவாக அறிக்கை மூலமாக தெரிவித்திருந்தார். தற்பொழுது இருக்கும் கொரோனா தொற்று மற்றும் தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு அரசியல் கட்சியை தொடங்கப்போவது இல்லை என்று வெளிப்படையாக அறிவித்திருந்தார்.

தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், ரஜினியின் ஆதரவு யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிமுக ஒரு பக்கம் தங்களுக்கு ரஜினி ஆதரவு தெரிவிப்பார் என கூறியிருந்தனர். அதே வேளையில் திமுகவும் எங்களுக்கு கண்டிப்பாக ஆதரவு தெரிவிப்பார் என கூறினர்.

இந்நிலையில், தேர்தலில் நடிகர் ரஜினிகாந்தின் ஆதரவு பாஜகவுக்கு தான் கிடைக்கும் என்று பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் கருத்து தெரிவித்துள்ளார். தற்போதைய சூழலில் ரஜினி யாருக்கும் வாய்ஸ் கொடுக்க மாட்டார் என தமிழருவி மணியன் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார். இதனிடையே ரஜினியின் ரசிகர்கள் அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், ரஜினியின் ஆதரவு பாஜகவுக்கு தான் கிடைக்கும் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் கருத்து கூறியுள்ளார்.

ரஜினி ஆன்மீகத்தை நம்புகிறவர் என்பதால் அவரின் ஆதரவு பாஜகவிற்கு கண்டிப்பாக கிடைக்கும் எனவும் அவர் கூறினார். மேலும், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு இடம் இருக்கிறதா என்பதே தெரியவில்லை எனவும் விமர்சனத்தை முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News