தேர்தல் களத்திற்கு தயார்.. பிரச்சாரத்திற்கு நாள் குறித்த அ.தி.மு.க.,

தேர்தல் களத்திற்கு தயார்.. பிரச்சாரத்திற்கு நாள் குறித்த அ.தி.மு.க.,

Update: 2020-12-16 16:55 GMT

தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி பல்வேறு கட்சிகள் தற்போதிலிருந்தே பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. அந்த வகையில் அதிமுக தேர்தல் பிரசாரத்தை அடுத்த மாதம் தொடங்குவதாக அறிவித்துள்ளது.

ஆளுங்கட்சியான அதிமுகவும் பிரசார களத்தில் குதிக்க தயாராகி வருகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் பிரசார பணிகள் குறித்து வியூகம் அமைத்து வருகிறார்கள். அடுத்த மாதம் மத்தியில் அவர்கள் பிரசாரத்தை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

அதாவது பொங்கல் பண்டிகையையொட்டி அதிமுக பிரசார பணிகளை மேற்கொள்ளும் என கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் பிரச்சார வாகனங்களில் சென்று மக்களின் ஆதரவை திரட்டுவார்கள் என கூறப்படுகிறது. இதற்காக பிரசார வாகனங்கள் மற்றும் தேவையான சாதனங்களை தயார்படுத்தும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

தேர்தல் பணிகள் தொடர்பாக ஏற்கனவே கடந்த திங்கட்கிழமை மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மண்டல பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது பிரசார பணிகளை எப்படி செய்ய வேண்டும். அடிமட்ட அளவில் எந்த வகையில் பிரசார யுக்திகள் இருக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

மேலும் பூத் கமிட்டி, பெண்கள் குழு, இளைஞர் பாசறை, ஐ.டி. பிரிவு ஆகியவற்றை அனைத்து பஞ்சாயத்து மட்டத்திலும் தயார்படுத்துவது பற்றியும் வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளன. இந்தமாத இறுதியில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது. அதில் கூட்டணி குறித்தும், பிரசார திட்டங்கள் குறித்தும் விவாதித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருக்கின்றன. அதைத்தொடர்ந்து பிரசார பணிகள் தொடங்கப்பட இருக்கிறது. 
 

Similar News