சசிகலா அரசியலுக்கு முழுக்கு.. தனக்கு அதிர்ச்சி, சோகத்தை ஏற்படுத்தியதாக டி.டி.வி.தினகரன் பேட்டி.!

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்று வந்த சசிகலா மீண்டும் அரசியலில் ஈடுபடுவார் என்று கூறப்பட்டு வந்தது. இதனால் வரும் சட்டமன்ற தேர்தலில் அவர் அமமுகவில் இருந்து போட்டியிடுவார் என்றெல்லாம் சொல்லப்பட்டு வந்தது.

Update: 2021-03-04 03:16 GMT

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்று வந்த சசிகலா மீண்டும் அரசியலில் ஈடுபடுவார் என்று கூறப்பட்டு வந்தது. இதனால் வரும் சட்டமன்ற தேர்தலில் அவர் அமமுகவில் இருந்து போட்டியிடுவார் என்றெல்லாம் சொல்லப்பட்டு வந்தது.




 


ஆனால் யாரும் எதிர் பார்க்காத முடிவை சசிகலா நேற்று இரவு எடுத்துள்ளார். இனிமேல் அரசியலில் ஈடுபட போவதில்லை. அரசியலில் இருந்து நிரந்தரமாக விலகுகிறேன் என்று ஒரு அறிக்கையை விட்டார். மேலும் கழகத்தின் தொண்டர்கள் ஒன்றிணைந்து திமுக விரட்டியடிக்க வேண்டும். மறுபடியும் அதிமுகவே வெற்றியடைய அனைத்து தொண்டர்களும் ஒற்றுமையுடன் இருந்து பணியாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.


 



இந்நிலையில், சசிகலா அறிக்கை குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், சசிகலா அரசியலைவிட்டு விலகியது தனக்கு அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக கூறியிருக்கிறார். இந்த அறிவிப்பு திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி என்றே கூறலாம். அவர்தான் பெங்களூரு சிறையில் இருந்து ஒருத்தர் வந்து கொண்டிருக்கிறார். அவர் வந்த உடனே அதிமுக ஆட்சி மற்றும் கட்சி காணாமல் போய்விடும் என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News