ஸ்டாலின் தலைக்கு மேல் கத்தி.. முதல்வர் எடப்பாடி அதிரடி.!

ஸ்டாலின் தலைக்கு மேல் கத்தி.. முதல்வர் எடப்பாடி அதிரடி.!

Update: 2020-11-12 11:21 GMT

விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு நடத்திய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். முடிவுற்ற பணிகளைத் தொடங்கி வைத்தார். இதன் பின்னர் 8,466 பயனாளிகளுக்கு ரூ.45.36 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

மேலும், வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு கொரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது இறப்பை வேண்டுமென்றே எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அவதூறான செய்திகளை பரப்பி வருகின்றார். அவர் விரக்தியின் விளிம்புக்குப் போய்விட்டார். இதன் காரணமாக இதுபோன்ற வார்த்தைகளை கொட்டித் தீர்க்கிறார்.

வேளாண்மைத்துறை அமைச்சர் இறப்பில் என்ன மர்மம் இருக்கிறதென்று நீங்க சொல்லுங்க. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மருத்துவ சிகிச்சை பெற்றது அதே காவிரி மருத்துவமனையில்தான். நீங்க மருத்துவமனையைக் குறை சொல்லுறீங்களா? சிகிச்சை அளித்த மருத்துவர்களை குறை சொல்லுறீங்களா?

அங்கே கொரோனா வைரஸ் இல்லாமல் யாரும் உள்ளே போக முடியாது. மருத்துவர்களும், செவிலியர்களும் நோயைக் குணப்படுத்துவதற்காக சிகிச்சை அளித்தார்கள். ஆனால் ஸ்டாலின் அரசியல் உள்நோக்கத்தோடு, அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு, பொய்யான அவதூறான பிரச்சாரத்தை பரப்பிக்கொண்டு வருகிறார்.

மேலும், ஆட்சி பத்து நாளில் போய்விடும்.. இரண்டு மாத்தில் போய்விடும்.. ஆறு மாதத்தில் போய்விடும் என்று கூறி வந்தார். அனைத்து இடைத்தேர்தல்களிலும் அவரோட கனவு பலன் தராமல் போனது.

தற்போது ஸ்டாலின் மலினான அரசியல் செய்து வருகிறார். நீங்க கொண்டுபோய் கருணாநிதியை சேர்த்து சிகிச்சை அளித்தது காவிரி மருத்துவமனையில்தானே. தினமும் அறிக்கை விட்டு கொண்டிருந்தீர்கள்.

அப்படி என்றால் நீங்கள் ஏதாவது தவறு செய்திருப்பீர்களோ என்று எங்களுக்கு சந்தேகம் வருகிறது. என்னை பொறுத்தவரையில் மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை அளித்தனர். விரைவில் மக்கள் ஸ்டாலினுக்கு உரிய பாடம் மக்கள் கற்பிக்க வேண்டும்.

முன்னாள் அமைச்சர்கள் மீது, பல அமைச்சர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு, நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது என்பதை ஸ்டாலின் எண்ணிப்பார்க்க வேண்டும். அவர்கூட அடுத்த தேர்தலிலே நிற்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது. அவருடைய தேர்தல் வழக்கு ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. அது எப்படி முடிவுக்கு வருமென்று தெரியவில்லை. முடிவு வேறு விதமாக இருந்தால், அவர் 6 வருடத்திற்கு தேர்தலில் நிற்க முடியாது. அவருடைய கனவு பலிக்காது. இவ்வாறு அவர் பேசினார்.

Similar News