ஏழுவர் விடுதலையில் முரண்படும் தி.மு.க. மற்றும் காங்கிரஸ்.!

ஏழுவர் விடுதலையில் முரண்படும் தி.மு.க. மற்றும் காங்கிரஸ்.!

Update: 2020-11-08 09:47 GMT

காங்கிரஸ் மற்றும் தி.மு.க ஆட்சியில் இருந்தவரை ஒட்டி உறவாடினார்கள். ஆனால் இன்று இரண்டுமே எதிர்கட்சிகள் இந்த இரண்டு எதிர்கட்சிகளும் தற்பொழுது தங்களுக்குள் எதிரி கட்சிகளாக மாறி வருகின்றன. ஆட்சியில் இருந்த வரைக்கும் இந்த இரு கட்சிகளும் இணைந்து இருந்தன. ஆனால் இன்றோ ஆட்சி போன பிறகு "நீங்கள் தான் காரணம், இல்லை இல்லை நீங்கதான் காரணம்" என இரு கட்சிகளும் மாறி மாறி மறைமுகமாக வாதங்களில் ஈடுபட்டு வருவது தற்பொழுது வெளிச்சத்திற்கு வர துவங்கியுள்ளது.

இந்த மனக்குமுறல் தற்பொழுது ஏழுவர் விடுதலையில் வெளிப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜூவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் சுமார் 30 ஆண்டுகளாக சிறை தண்டனை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இந்த விகாரம் தொடர்பாக ஆளுநர் உடனே முடிவு எடுக்க வேண்டும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின், வைகோ உள்ளிட்டோர்  தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வரும் நிலையில் தி.மு.க கூட்டணியில் உறவாடும் காங்கிரஸ் "ஏழுவர் விடுதலை தேவையற்றது" என அறிக்கை விடுத்ததால்  தி.மு.க கூட்டணி விக்கித்து நிற்கிறது.

இந்த விவகாரத்தில் நேற்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஒரு அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில் ஏழுவர் விடுதலைக்கு கடும் கண்டனம் தெரிவித்தது மட்டமல்லாமல் "அரசியல் கட்சியினர் அவர்களுக்கு விடுதலை கூறுவது ஏற்புடையது அல்ல. கொலை குற்றம் செய்தவர்களை குற்றவாளிகள் என்று தான் கருத வேண்டுமே தவிர அவர்களை தமிழர்கள் என்று அழைப்பது சரியல்ல" என அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்த பக்கம் ஆளுநர் மேல் குற்றம் சுமத்தி அரசியலாக்க முயற்சி மேற்கொண்ட தி.மு.க தலைவர் ஸ்டாலின் தன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியே தன் காலை வாரிவிடும் என சற்றும் எதிர்பார்க்கவில்லை. =பின் இதனை சமாளிக்கும் விதமாக ஸ்டாலின் பேசாமல் தி.மு.க'வின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிக்கை விடுத்திருந்தார். அந்த அறிக்கையில், "காங்கிரஸ் உடன் கூட்டணியில் இருப்பதால் எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ள முடியாது. கூட்டணி வேறு, கொள்கை வேறு" என்றும் அவர் குறிப்பிட்டார்

ஆளுநர் மீது பழியை போட்டு இந்த பழியையும் மத்திய அரசின் மேல் சுமத்தலாம் அதையும் தேர்தல் நேரத்தில் அரசியலாக்கி லாபம் பார்க்கலாம் என நினைத்த ஸ்டாலின் கனவில் மண் விழுந்தது.

Similar News