இந்துக்களை அவமதிக்கும் ஸ்டாலின்.. கோயிலுக்கு நுழைய முயற்சித்த தி.மு.க., எம்.எல்.ஏ.,வை துரத்தி அடித்த பொதுமக்கள்.!

இந்துக்களை அவமதிக்கும் ஸ்டாலின்.. கோயிலுக்கு நுழைய முயற்சித்த தி.மு.க., எம்.எல்.ஏ.,வை துரத்தி அடித்த பொதுமக்கள்.!

Update: 2021-01-17 17:52 GMT

திமுக எம்.எல்.ஏ., மனோஜ் தங்கராஜை கோயிலுக்கு நுழைய விடாமல் பொதுமக்கள் துரத்தி அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் எப்போதும் இந்துக்களை தரக்குறைவாக விமர்சனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அருகே அருள்மிகு சக்திவினாயகர் திருக்கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலில் வருடம்தோறும் பொங்கல் அன்று திருவிழா நடைபெறுவது வழக்கம். அதே போன்று அப்பகுதி பொதுமக்கள் வருடம் தோறும் இந்த திருவிழாவை கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பத்மநாபபுரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ., மனோ தங்கராஜ் கோயிலுக்கு வருகை புரிந்தார். அவருடன் திமுகவை சேர்ந்தவர்கள் 50 பேர் வந்தனர்.

அப்போது அனைவரும் கோயிலுக்கு நுழைய முயன்றபோது அவர்கள் அனைவரையும் கோயிலுக்கு நுழையவிடாமல் பொதுமக்கள் தடுத்தனர். இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் எம்.எல்.ஏ.விடம் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுப்பட்டனர்.

பொதுமக்களின் எதிர்ப்பை தொடர்ந்து எம்.எல்.ஏ.வும் அவரது ஆட்களும் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இது பற்றி பொதுமக்கள் கருத்து கூறியதாவது: திமுக தலைவர் ஸ்டாலின் எப்போதும் இந்துக்களை தவறாக விமர்சனம் செய்து வருகின்றார். அவரது கட்சியை சேர்ந்தவர்களும் இந்துக்கடவுளை விமர்சனம் செய்து வருவது வாடிக்கையாகிவிட்டது.

இதனால்தான் பொங்கல் விழா வைப்பதற்கு வந்த திமுக எம்.எல்.ஏ.வை விரட்டி அடித்தோம் என்று கூறினர். ஏற்கெனவே எம்.எல்.ஏ-., மனோ தங்கராஜ் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பிரதமர் மோடியை கொரோனா வைரசுடன் ஒப்பிட்டு பதிவு வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு பொதுமக்களும் பாஜகவினரும் கண்டனம் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Similar News