வீட்டை விட்டு வெளியில் வருவதற்கு பயப்படும் ஸ்டாலின்.. தேர்தல் பரப்புரைக்கு தயாரான முதல்வர்.!

வீட்டை விட்டு வெளியில் வருவதற்கு பயப்படும் ஸ்டாலின்.. தேர்தல் பரப்புரைக்கு தயாரான முதல்வர்.!

Update: 2020-12-19 10:29 GMT

2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று முதல் தன்னுடைய சொந்த மாவட்டமான சேலத்தில் இருந்து தொடங்குகிறார்.

2021 சட்டமன்ற தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொரோனா தொற்று காரணமாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் பரப்புரை செய்து வருகிறார். இன்று முதல் திறந்த வெளியில் அரசியல் மத கூட்டங்களை நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில் இன்று முதல் பிரச்சாரத்தை ஆரம்பிக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

இந்நிலையில் தனது எடப்பாடி தொகுதியிலிருந்து சட்டமன்ற தேர்தல் பரப்புரையை இன்று தொடங்குகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. சட்டமன்ற தேர்தலுக்கு நாட்கள் குறைவாக இருக்கின்ற காரணத்தினால் இன்று முதல் பிரச்சாரத்தை தொடங்குகிறார். அதிமுக அரசின் சாதனைகளை கூறியும், வாக்குறுதிகளை தெரிவித்தும் மக்களிடம் வாக்கு சேகரிக்கிறார். 

இதனையொட்டி அவருக்கென்று பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட வாகனம் எடப்பாடிக்கு வரவழைக்கப்பட்டு, அதற்கு மாலையிட்டு பூஜைகள் செய்தனர் அதிமுகவினர். இந்த வாகனத்தில் ஏறிதான் அனைத்து இடங்களிலும் முதலமைச்சர் பிரச்சாரம் மேற்கொள்வார் என கூறப்படுகிறது.

இதன் காரணமாக எடப்பாடி தொகுதி முழுவதும் அதிமுக தொண்டர்களை காண முடிகிறது. இதனிடையே கொரோனா தொற்றுக்கு பயந்து திமுக தலைவர் ஸ்டாலின் வீட்டில் இருந்து கொண்டே காணொலி வாயிலாக கட்சி கூட்டத்தை நடத்தி வருகின்றார். ஆனால் முதலமைச்சர் கொரோனா தொற்றுக்கு பயமில்லாமல் தனது பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Similar News