"எங்க வேலைய செய்ய விடுங்க" என புலம்பும் ரேசன் கடை ஊழியர்கள்! முந்திக்கொண்டு அறிக்கை விட்ட ஸ்டாலின்!

"எங்க வேலைய செய்ய விடுங்க" என புலம்பும் ரேசன் கடை ஊழியர்கள்! முந்திக்கொண்டு அறிக்கை விட்ட ஸ்டாலின்!

Update: 2020-12-28 15:16 GMT

பொங்கல் பரிசாக 2500 ரூபாய் பணமாக தருவதாக தமிழக அரசு அறிவித்து அதற்கான டோக்கன் வழங்கும் வேலைகளை தமிழக அரசின் நியாயவிலைக்கடை பணியாளர்கள் கடந்த இரண்டு நாட்களாக பார்த்து வருகின்றனர். இதன் மூலம் தினமும் ரேசன் அட்டைதாரர்களுக்கு பணியாளர்கள் வீடு வீடாக சென்று டோக்கன்களை வழங்கி வருகின்றனர்.

இதனார் கொரோனோ தொற்று பரவாமலும் கடையில் கூட்டம் சேருவதை தவிர்க்கவும் தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

இதற்கிடையில் கரூர் வடக்கு காந்தி கிராமம் பகுதியில் ரேசன் கடை பணியாளர்கள் டோக்கன் வழங்க அ.தி.மு.க'வினர் உதவி செய்து வருகின்றனர். இதனை கண்டு பொருத்துக்கொள்ள முடியாத தி.மு.க'வினர் தகாராறில் ஈடுபட்டுள்ளனர். மக்களுக்கு பணியாளர்கள்  டோக்கன் வழங்கிகொண்டிருந்து  வேலையில் அங்கு வந்த கிருஷ்ணாபுரம் தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ காமராஜ் டோக்கன் வழங்க அ.தி.மு.க'வினரை அழைத்து சொல்ல கூடாது எனவும் தி.மு.க'வினர் தான் வருவோம் எனவும் மிரட்டியுள்ளார்.

இது குறித்து ரேசன் அதிகாரிகள் கூறியபோது, "தினமும் 300 குடும்பத்தினருக்கு மட்டுமே டோக்கன் வழங்க இயலும் என்பதால் அ.தி.மு.க'வினரை வைத்து விநியோகம் செய்து வருகிறோம். ஆனால் தி.மு.க ஆதரவாளர்கள் எங்களை  'ஆட்சிக்கு வந்தால் இந்த இடத்தை இல்லாமல் செய்துவிடுவோம் என்று மிரட்டுகின்றனர். 

மேலும் எங்களை இல்லாமல் டோக்கனை விநியோகம் செய்ய கூடாது எனவும் சண்டையிடுகின்றர் என்று புலம்புகின்றனர் ரேசன் கடை ஊழியர்கள்.

மேலும் தமிழகத்தில் இந்த விவகாரம் பல்வேறு பகுதிகள் தொடர்ந்து நடைபெறுவதாலும், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நியாயவிலைகடைகளில் ஊழியர்கள் தி.மு.க'வினரால் டோக்கன் விநியோகம் செய்யும் விவகாரத்தில் தொடர்ந்து தொல்லை செய்யப்படுவதாலும் இது தொடர்பாக "தமிழக அரசு நியாயவிலைகடை பணியாளர்கள் சங்கம்" மூலமாக அதன் ஊழியர்கள் கூட்டமைப்பு தமிழக முதல்வருக்கு ஒரு கோரிக்கை மனுவை அளித்துள்ளது. 

அதில், "தமிழ்நாட்டில் கூட்டுறவுத்துறை மூலம் அனைத்து மாவட்டங்களிலும் நியாயவிலைக்கடைகளில் பொங்கல் பரிசுத் தொகை ரூ.2,500/- மற்றும் பொங்கல் பை வழங்குவதற்கு நியாயவிலைக்கடை பணியாளர்கள் 25.12.2020 முதல் டோக்கன் வழங்குவதையொட்டி அந்தந்த பகுதிகளில் உள்ள அரசியல் கட்சி பிரமுகர்கள் நியாயவிலைக்கடை பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு டோக்கன் வழங்குவதற்கு இடையூறாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை உருவாக்கி வருகின்றனர்.

இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் அளித்து நியாயவிலைக்கடை பணியாளர்களை அரசு உத்திரவிற்கிணங்க பணியாற்றுவதற்குரிய நடைமுறைகளை அமுல்படுத்த தகுந்த உத்திரவுகள் பிறப்பிக்கப்பட வேண்டுமாய் எங்களது தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடைப் பணியாளர் சங்கத்தின் மாநில மையத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்" என குறிப்பிட்டு மனுவை கோரிக்கை மனுவை அளித்துள்ளனர்.


இதனை தொடர்ந்து தி.மு.க'வினர் பிரச்சனை செய்வது எங்கே தேர்தல் சமயத்தில் தி.மு.க'விற்கு எதிராக திரும்பி விடுமோ என்ற அச்சத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் முந்திக்கொண்டு ஒர் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அதில், "பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட 2500 ரூபாய் மற்றும் பரிசு தொகுப்புக்கான டோக்கன் வழங்கும் பணி, ரேசன் கடை ஊழியர்கள் மூலம் மட்டுமே நடைபெற்றிட வேண்டும்" என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது.

ஏற்கனவே மக்கள் மத்தியில் ரவுடியிசம், கடைகளில் திருட்டு, கட்டபஞ்சாயத்து, ஊழல் என பெயர் பெற்று விளங்கும் தி.மு.க இந்த நியாயவிலைகடை ஊழியர்களின் பிரச்சனையால் இன்னும் பெயர் வீணாகிவிடுமோ என்ற அச்சத்தில் ஸ்டாலின் முந்திக்கொண்டு அறிக்கை வெளியிட்டதாக தெரிகிறது.

Images source - தினமலர்.

Similar News