'இனியாவது விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்' - தமிழக அரசுக்கு அறிவுரை கூறிய அர்ஜுன் சம்பத்

'கிராமப்புறங்களில் திருவிழாக்கள் நடக்கும் பொழுது அதனை அரசு கவனத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சிறப்பாக கையாள வேண்டும்' என தஞ்சை மாவட்ட தேர் திருவிழா விபத்து பற்றி இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

Update: 2022-05-03 10:00 GMT

'கிராமப்புறங்களில் திருவிழாக்கள் நடக்கும் பொழுது அதனை அரசு கவனத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சிறப்பாக கையாள வேண்டும்' என தஞ்சை மாவட்ட தேர் திருவிழா விபத்து பற்றி இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.


தஞ்சை மாவட்டம் களிமேடு தேர் திருவிழா விபத்தில் 11 பேர் பலியான சம்பவம் குறித்து தமிழக மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர், விபத்தில் பலியான குடும்பத்தை சேர்ந்தவர்களை இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதனையடுத்து அவரை பார்வையிட்டு ஆய்வு செய்தார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது, தேர் திருவிழா விபத்தில் 11 பேர் பலியான சம்பவம் வேதனையளிக்கிறது. தமிழக அரசு, மத்திய அரசு மற்றும் பல்வேறு கட்சியினர் நிவாரணம் வழங்கியது வரவேற்கிறேன். பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்' என்றார்.

மேலும் பேசிய அவர் கூறியதாவது, 'விபத்து தொடர்பாக ஒரு நபர் குழு விசாரணை நடத்தி வருகிறது, கிராமப்புறங்களில் பல இந்து கோவில்கள் இந்து சமய அறநிலையத் துறைக்கு உட்படாத கோவிலாக உள்ளது, அந்த கோவில்களில் திருவிழாக்கள் நடக்கும் நேரத்தில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பாதுகாப்பு தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்' எனவும் கூறினார்.

'இனி இதுபோன்ற விபத்துகள் நிகழாமல் இருக்க தமிழக அரசு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்' எனவும் கேட்டுக் கொண்டார்.

Source - Maalai Malar


Similar News