'ஐயா குவார்ட்டர் 200 ரூபாயாம் அது என்னனு கேளுங்க' - அமைச்சர் ராஜகண்ணப்பனை நேருக்கு நேர் கேள்வி கேட்ட மதுபிரியர்

'ஐயா குவாட்டர் 200 ரூபாய்க்கு வைக்கிறாங்க அது என்னன்னு கேளுங்க' என அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்ட கிராம சபை கூட்டத்தில் மதுபிரியர் ஒருவர் கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-05-03 10:15 GMT

'ஐயா குவாட்டர் 200 ரூபாய்க்கு வைக்கிறாங்க அது என்னன்னு கேளுங்க' என அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்ட கிராம சபை கூட்டத்தில் மதுபிரியர் ஒருவர் கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் நேற்று கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட்டன அதில் உள்ளாட்சிகளின் வரவு, செலவு கணக்குகள், வளர்ச்சித் திட்டங்கள், நிதி ஒதுக்கீடு குறித்து விவாதிக்கப்பட்டன பல்வேறு கிராமங்களில் முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே கால்வாய் குளம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்துகொண்டார், அப்பொழுது கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் திடீரென கூட்டத்தில் கலந்து கொண்ட மதுபிரியர் ஒருவர் 'ஐயா ஒரு குவார்ட்டர் 200 ரூபாய் என அநியாயமாக விக்கிறாங்க அதை முதலில் என்னவென்று கேளுங்கள்' என கூறினார்.

அதைக்கேட்ட டென்ஷனான அமைச்சர் ராஜகண்ணப்பன் அவரை கூட்டத்திலிருந்து அப்புறப்படுத்துங்கள் என போலீசாருக்கு அறிவுறுத்தினார். அதனை அடுத்து அருகில் இருந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் போலீசார் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர் இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

மேலும் அதே கூட்டத்தில் மற்ற ஒரு சம்பவமாக ஊராட்சியின் செயலர் செலவினங்களை வாசித்த பொழுது 'அருந்ததியர் காலனி செலவிடப்பட்ட தொகை' எனக்கூறினார் கூட்டத்திலிருந்து அந்த பகுதி இளைஞர்கள் 'தேவேந்திரகுல வேளாளர் என பெயர் மாற்றம் செய்யப்பட்ட நிலையில் அருந்ததியர்கள் என எப்படி சொல்லலாம்' என அமைச்சர் ராஜகண்ணப்பன் முன்பாக கூச்சலிட்டனர். இதனையடுத்து அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கர்லால் குமாவத் ஊராட்சி செயலர் இடம் இருந்து மைக்கை வாங்கி 'தேவேந்திரகுல வேளாளர்' என வாசித்தார் இதனால் அந்த கிராம சபை கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Source - Junior Vikatan

Similar News