26ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடியை கோலாகலமாக வரவேற்க தயாராகும் தி.மு.க - ஏ.வ.வேலு தலைமையில் ஏற்பாடுகள் தீவிரம்

மே 26ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடியை வரவேற்க தி.மு.க அரசு கோலாகலமாக தயாராகி வருகிறது இதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் ஏ.வ.வேலு முன் நின்று கவனித்து வருகிறார்.

Update: 2022-05-23 15:00 GMT

மே 26ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடியை வரவேற்க தி.மு.க அரசு கோலாகலமாக தயாராகி வருகிறது இதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் ஏ.வ.வேலு முன் நின்று கவனித்து வருகிறார்.

பரபரப்பான அரசியல் சூழலில் பிரதமர் மோடி வரும் 26-ஆம் தேதி அரசு முறை பயணமாக தமிழகம் வருகிறார் சென்னையில் மக்களுக்காக கிட்டத்தட்ட 17407 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களை தமிழக மக்களுக்காக துவங்கி வைக்க வருகை தரும் பிரதமர் மோடிக்கு கோலாகல வரவேற்பு தருவதற்காக தமிழக அரசு சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்கான முன்னேற்பாடுகளை பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு நேரு உள்விளையாட்டு அரங்கில் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது, 'பிரதமர் வரும் வழி மற்றும் அவர் மேடை, ஒலிபெருக்கிகள், ஒளி விளக்குகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளதா என ஆய்வு' செய்ததாகவும் தெரிவித்தார்.

26ம் தேதியன்று தமிழகம் வரும் பிரதமர் 17407 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். நெடுஞ்சாலைத் துறை முதன்மைச் செயலாளர் தீராஜ்குமார் அவர்கள் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Source - Asianet News

Similar News