இலவச சேலை தருகிறோம் என கிராம சபை கூட்டம் நடத்திய தி.மு.கவினர் - கடைசியில் சேலை தராமல் ஓட்டம்!

இலவச சேலை தருகிறோம் என கிராம சபை கூட்டம் நடத்திய தி.மு.கவினர் - கடைசியில் சேலை தராமல் ஓட்டம்!

Update: 2020-12-26 15:48 GMT

இணையங்களில் தி.மு.க'விற்கு லட்சகணக்காணோர் ஆதரவு உள்ளது போல் கோடிகளில் செலவு செய்து தி.மு.க தலைமை தம்பட்டம் அடித்துக்கொண்டாலும் உண்மையில் களத்தில் இன்னமும் கூலிக்கு ஆள் பிடித்துதான் தி.மு.க கூட்டம் சேர்க்கிறது.

அந்த வகையில் இலவச சேலை தருகிறோம் என ஆசை வார்த்து காட்டி பெண்களை கிராம சபை கூட்டத்திற்கு வரவழைத்து கூட்டம் முடிந்நதும் குடுக்க சேலை இல்லாததால் தி.மு.க'வினர் ஓட்டம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 


திருவள்ளூர் மாவட்டம் ஆத்துப்பாக்கத்தில் எல்லாபுர வடக்கு ஒன்றிய தி.மு.க சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் வழக்கம் போல் தி.மு.க கூட்டிய கூட்டத்திற்கு மக்கள் வராததால் ஏதாவது பொய் சொல்லி வரவழைக்கலாம் என திட்டம் போட்ட தி.மு.க'வினர் கூட்டத்திற்கு வரும் பெண்களுக்கு இலவச சேலை என அறிவித்தனர்.

உடனே அக்கம் பக்கத்தில் உள்ள பெண்கள் வந்து அங்கு திரளாக திரண்டனர். இதுதான் சமயம் என உடனே தி.மு.க'வினர் மக்கள் கிராம சபை கூட்டத்தை முடித்துக்கொண்டனர். கூட்டம் முடிந்ததும் எங்கே சேலை என பெண்கள் கேட்டு அப்பகுதியில் கூட்டம் ஏற்பாடு செய்த  தி.மு.க'வினரை மக்கள் சூழ்ந்து கொண்டனர்.

உடனே 
வடக்கு ஒன்றிய செயலாளர் பி.ஜே.மூர்த்தி தனது காரில் இருந்து சிலருக்கு சேலை வழங்கினார். குறைவான பெண்களுக்கே தரும் அளவிற்கு சேலை இருந்ததால் அங்கு வந்த அனைத்து பெண்களும் சேலை இல்லாமல் ஏமாந்து போயினர். உடனே போபமடைந்த அப்பகுதி பெண்கள் "இலவச சேலை என கூறிதானே எங்களை கூட்டதிற்கு எங்களை வரவழைத்தீர்கள் எங்கே சேலை" என கேட்க பதிலேதும் கூற முடியாமலும், சேலை தர இயாலாமலும் அப்பகுதியை விட்டு தி.மு.க'வினர் ஓட்டம் பிடித்தனர்.

இலவச சேலை என ஆசை காட்டி பெண்களை தி.மு.க'வினர் ஏமாற்றி சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் "ஏமாத்திட்டா ஓடுறீங்க? ஓட்டு கேட்க வராமலா போய்டுவாங்க" என அப்பகுதி பெண்கள் கோபமடைந்துள்ளனர்.

Source - News J,

Images - News J

Similar News