தி.மு.க-விடம் ரூ.10 கோடி பெட்டி வாங்கியது உண்மைதான் - ஒப்புக் கொண்டது மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி!

தி.மு.க-விடம் ரூ.10 கோடி பெட்டி வாங்கியது உண்மைதான் - ஒப்புக் கொண்டது மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி!

Update: 2021-02-21 08:51 GMT

கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தோதலின்போது தி.மு.க-விடம் இருந்து ரூ.10 கோடி பெற்றது உண்மை தான் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒப்புக் கொண்டுள்ளது.

அதே வேளையில் திமுக தனது மற்றொரு கூட்டணிக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு, மக்களவைத் தோதலின் போது ரூ.15 கோடியை நன்கொடையாக அளித்தது. அப்போது, ஒரு அரசியல் கட்சியே மற்றொரு அரசியல் கட்சிக்கு தோதல் நன்கொடை கொடுத்த விஷயம் பரபரப்பாக பேசப்பட்டது.

கடந்த 2019 ஆம் ஆண்டு  திமுக கூட்டணியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடம் பெற்றிருந்தது. அப்போது  ஏப்ரல் 5, ஏப்ரல் 9, ஏப்ரல் 11 ஆகிய தேதிகளில் ஆன்லைன் பணப்பரிமாற்றத்தின் மூலம் 8 தவணைகளாக ரூ.10 கோடி பெறப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தி.மு.க தனது தோதல் செலவு அறிக்கையில் இந்தத் தொகையைக் குறிப்பிட்டிருந்தது. தேர்தலில் பண பலத்தை பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும் என்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை குறித்தும் கேள்வி எழுந்தது.

திமுக கொடுத்த பத்து கோடியோடு சேர்த்து, கடந்த 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டில் மட்டும் ரூ.19.69 கோடியை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் நன்கொடையாகப் பெற்றது.  2018 ஆம் ஆண்டில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெறும் ரூ.3.02 கோடி மட்டுமே நன்கொடையாகப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

திமுகவிற்கு அடுத்து முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனம் மாா்க்சிஸ்ட் கட்சிக்கு அதிகபட்சமாக ரூ.2.65 கோடி நன்கொடை அளித்துள்ளது. இதற்கு அடுத்து ஹைதராபாதைச் சோந்த நவயுகா இன்ஜினியரிங் நிறுவனம் ரூ.50 லட்சம் அளித்துள்ளது.

இவ்வளவு நிதி பெற்றும், திமுகவிடமிருந்து ரூ.10 கோடி பெற்றதை, தேர்தல் செலவு அறிக்கையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவிக்காமல் இருந்தது. மக்களவைத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் 8 கட்சிகள் இருந்தன. இதில் மதுரை, கோவை தொகுதிகளில் போட்டியிட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இரண்டிலும் பண பலத்தை பயன்படுத்தி வெற்றி பெற்றது.

Similar News