நாடாளுமன்ற தேர்தலில் இருந்த கட்சிகள் இன்னும் கூட்டணியில் தொடர்கிறது.. முதலமைச்சர்.!

நாடாளுமன்ற தேர்தலில் இருந்த கட்சிகள் இன்னும் கூட்டணியில் தொடர்கிறது.. முதலமைச்சர்.!

Update: 2020-12-16 17:18 GMT

கரூர் மாவட்டத்தில் இன்று புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். பின்னர் நிதியுதவிகள் வழங்கி பேசியதாவது: இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி கிடைத்த உடன் தமிழகத்தில் இலவசமாக விநியோகம் செய்யப்படும். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட உள்ளதாக வெளியாகும் தகவலில் எதிர்க்கட்சியினரின் சூழ்ச்சி உள்ளது.

விவசாயிகளுக்கு தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும் என்பதில் மாற்றம் இல்லை. நான் விவசாயி என்று ஸ்டாலின் எனக்கு சான்றிதழ் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும், ஏஜென்டுகளின் நலன்களுக்காக விவசாயிகளை எதிர்கட்சியினர் தவறாக வழிநடத்துகின்றனர். வேளாண் சட்டம் தொடர்பான 3 சட்டங்களில் தமிழக விவசாயிகளை பாதிக்கும் அம்சம் என்ன என்று கூற முடியுமா? என கேள்வி எழுப்பினார்.

வேளாண் சட்டத்தில் உள்ள பாதகமான அம்சங்களை சொல்லுமாறு கேட்டால் எதிர்கட்சிகளிடம் எந்தவித பதிலும் இல்லை. நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் தற்போதும் கூட்டணியில் தொடர்கின்றன. நீட் தேர்வால் அரசுப் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே 7 சதவீத உள்ஒதுக்கீடு கொண்டு வந்தோம். இவ்வாறு அவர் பேசினார்.
 

Similar News