காசு கொடுத்து கனிமொழியின் பேச்சைக் கேட்க இழுத்து வரப்படும் பொதுமக்கள்! ஆட்டுமந்தைகள் போல ஏற்றிச்செல்லப்பட்ட அவலம்!

காசு கொடுத்து கனிமொழியின் பேச்சைக் கேட்க இழுத்து வரப்படும் பொதுமக்கள்! ஆட்டுமந்தைகள் போல ஏற்றிச்செல்லப்பட்ட அவலம்!

Update: 2020-12-30 06:56 GMT

அரசு சார்பில் பொங்கல் பரிசு வழங்க டோக்கன் கொடுக்கப்படுவது போல, தி.மு.க எம்.பி. கனிமொழியின் பிரச்சாரக் கூட்டத்தில், டோக்கன் கொடுத்து திமுகவினர் கூட்டம் கூட்டிய சம்பவம் முகம் சுளிக்க வைத்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில், தி.மு.க எம்.பி கனிமொழி வருகையையொட்டி, திமுகவினர் பிரசார கூட்டத்தை ஏற்பாடு செய்தனர். இதில் அதிக கூட்டத்தை கூட்டுவதற்காக, திமுக உள்ளூர் கட்சி நிர்வாகிகள், சுற்று வட்டார கிராமங்களில் இருந்து பொதுமக்களை சரக்கு வாகனங்களில் ஏற்றி, கூட்டத்திற்கு அழைத்து வந்தனர்.

கூட்டத்தில் பங்கேற்க 500 ரூபாய் தருவதாகக் கூறி, ஒவ்வொருவர் கையிலும் டோக்கன் கொடுத்த திமுகவினர், கூட்டம் முடிந்தவுடன் 100 ரூபாய் மட்டும் கொடுத்து ஏமாற்றியதாக வந்தவர்கள் குமுறியுள்ளனர். பேசிய தொகையை வழங்காத நிலையில், உச்சி வெயிலில் அமர வைத்ததால் பலர் அதிருப்தி அடைந்தனர்.

திமுக பிரச்சாரக் கூட்டத்தில்  கலந்து கொள்ள மக்கள் பெரிய அளவில் ஆர்வம் காட்டுவதில்லை. அதனால் தினக்கூலிகளாக பணியாற்றும் மக்களை, ஒரு நாள் கூலியை விட அதிகம் பணம் தருகிறோம் என்று சொல்லி அழைத்துவந்து உட்கார வைத்துவிட்டு, கடைசியில் ஏமாற்றி அனுப்பும் சம்பவம் தொடர்கதையாகிவிட்டது.

ஏற்கனவே இது குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் பேசியுள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “மாநகராட்சி பகுதியில் திமுகவினர் கிராமசபை கூட்டங்களை நடத்தி வருகிறார்கள். திமுக நடத்தி வரும் இதுபோன்ற கிராம சபை கூட்டத்தை கண்டு அதிமுக எதற்கு பயப்பட வேண்டும்? கிராமசபை கூட்டத்துக்கு ரூ. 300 வரை பணம் கொடுத்துதான் பொதுமக்களை அழைத்துவருகிறார்கள்" என்று கூறியிருந்தார்.

Similar News