இதுவரை வரலாற்றில் இல்லாத அளவிற்கு தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு வழங்கும் தமிழக அரசு

இருபத்தி ஆறாம் தேதி சென்னை வருகை தரும் பிரதமர் மோடிக்கு 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-05-24 12:16 GMT

இருபத்தி ஆறாம் தேதி சென்னை வருகை தரும் பிரதமர் மோடிக்கு 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வரும் 26ம் தேதி தமிழக மக்களுக்காக 17 ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்டங்களை அர்ப்பணிக்க பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடிக்கு 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வரும் 26'ம் தேதி அன்று மாலை 5 மணி அளவில் பிரதமர் மோடி சென்னை விமான நிலையத்தை வந்தடைவார், பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. கவர்னர் ஆர்.என். ரவி, முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பிரதமர் மோடிக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளிக்கிறார்கள்.

பின்னர் பிரதமர் வருகையை முன்னிட்டு சென்னை விமான நிலையத்திலிருந்து மாலை 5:45 மணிக்கு நேராக நேரு ஸ்டேடியம் வரும் பிரதமர் மோடி கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

மோடி வருகையையொட்டி பாதுகாப்பு அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை வந்துள்ளனர். சென்னை விமான நிலையம், மற்றும் பிரதமர் செல்லும் வழித்தடங்கள், நேரு உள்விளையாட்டு அரங்கம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்து வருகின்றனர்.

போலீஸ் டி.ஜி.பி சைலேந்திரபாபு, கூடுதல் டி.ஜி.பி தாமரைக்கண்ணன் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் பிரதமரின் பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

இதுவரை இல்லாத அளவிற்கு தற்போது பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இரவு 7 மணி வரை நடைபெறும் விழாவை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி டெல்லி புறப்பட்டு செல்கிறார் இதற்காக இரவு 7:30 மணி அளவில் சென்னை விமான நிலையம் சென்று பிரதமர் மோடி அங்கிருந்து விமானப்படை விமானத்தில் புறப்பட்டு டெல்லி செல்கிறார். 


Source - Maalai Malar

Similar News