ஐ.மு.கூட்டணிக்கு தலைமை ஏற்க ஆர்வமும் இல்லை.. நேரமும் இல்லை.. நழுவிய சரத் பவார்.!

ஐ.மு.கூட்டணிக்கு தலைமை ஏற்க ஆர்வமும் இல்லை.. நேரமும் இல்லை.. நழுவிய சரத் பவார்.!

Update: 2020-12-28 13:18 GMT

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவராக தேசியவாதக் காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பொறுப்பேற்பதாக எழுந்த செய்திகளுக்கு சரத் பவார் தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

ஐமுகூ தலைமைப் பொறுப்பை ஏற்பதற்கான ஆர்வமும் இல்லை, அதற்கான நேரமும் இல்லை என்று மறுத்து விட்டார் சரத் பவார். தனியார் செய்தி சேனலுக்கு அவர் அளித்துள் பேட்டியில்: ஐமுகூ தலைவராக எனக்கு ஆர்வமும் இல்லை, நேரமும் இல்லை. அப்படிப்பட்ட ஒன்றைப் பற்றிய கேள்வியே என் மனதில் எழவில்லை என்றார் சரத் பவார்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவராக சோனியா காந்தி இருந்து வருகிறார். தற்போது அவரது உடல்நிலை சரியில்லாததன் காரணமாக அவர் அரசியலிலிருந்து ஓய்வு பெற அவர் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து ஐ.மு.கூட்டணியின் தலைவராக சரத் பவாரை நியமிக்க சோனியா திட்டமிட்டுள்ளதாக பத்திரிக்கை செய்திகள் தெரிவித்தன. 

சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத், அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று கூறியதை தொடர்ந்து ஐ.மு.கூ., தலைவராக சரத் பவார் பொறுப்பேற்பார் என்ற யூகம் எழுந்தது.

இந்நிலையில், இந்த தகவலை மறுத்துள்ள சரத் பவார், டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளைச் சந்திக்கவுள்ளதாக கூறியுள்ளார். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு தற்போது யாருமே பொறுப்பேற்க தயங்குவது ஏன் என பொதுமக்கள் யோசிக்க தொடங்கியுள்ளனர். நாடு முழுவதும் மக்களுக்கு துரோகம் இழைத்ததுதான் காங்கிரஸ் கட்சி என அனைவரும் பேசி வருகின்

Similar News