தலித் சமூகத்தை இழிவுபடுத்தும் தி.மு.க MLA - வழக்கம் போல் கண்டுகொள்ளாத திருமாவளவன்.!

தலித் சமூகத்தை இழிவுபடுத்தும் தி.மு.க MLA - வழக்கம் போல் கண்டுகொள்ளாத திருமாவளவன்.!

Update: 2020-11-25 11:51 GMT

தமிழ்நாட்டில் ஜாதியை நாங்கள் ஒழித்து விட்டோம் என்று இணைய தி.மு.கவினர் அவ்வப்போது மார்தட்டி வந்தாலும்,  ஜாதிக் கட்சிகளுடன் கூட்டணி வைப்பதும், நீ என்ன ஜாதி என்று வெளிப்படையாக தொண்டர்களிடம் கேட்பதும் என முரண்பாடுகளின் மொத்த உருவமாக தி.மு.க நிற்கும்.

தயாநிதிமாறன் நாங்கள் என்ன தாழ்த்தப்பட்டவர்களா என்று இழிவுபடுத்திப் பேசிய போது கூட அதை தோழமையாக சுட்டிக் காட்டி விட்டு திருமாவளவன் ஒதுங்கிவிட்டார். 

இந்நிலையில் கிருஷ்ணகிரியில் உள்ள தி.மு.க அலுவலகத்தில் நடைபெற்ற ஒரு கட்டப்பஞ்சாயத்தின் போது தி.மு.க எம்எல்ஏ, ஒருவரை கொலை செய்துவிடுவேன் என மிரட்டுவதும், தலித் சமூகத்தை மறைமுகமாக இழிவுபடுத்திப் பேசுவதுமாகிய ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

 கிருஷ்ணகிரியை சேர்ந்த தி.மு.க எம்எல்ஏ செங்குட்டுவன், இரு தரப்பினருக்கு இடையிலான நிலப் பிரச்சனை தொடர்பாக கட்டப்பஞ்சாயத்து நடத்திக்கொண்டிருந்தார். தனது கட்டளைகளுக்கு கீழ்படிந்து நடக்கா விட்டால் கொலை செய்து விடுவேன் என்று ஒருவரை மிரட்டுவது வீடியோவில் தெரிகிறது. 

இந்த வீடியோவில் கிருஷ்ணகிரியின் தி.மு.க செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான செங்குட்டுவன், தமிழில் ஒருவரை கெட்ட வார்த்தைகளில் திட்டுவதையும், ஒருவரின் எலும்புகளை உடைத்து தூக்கில் தொங்க விட்டு விடுவேன் என்று மிரட்டுவதையும் காணலாம்.

 "நீ குடியானவனாகப் பிறந்ததற்குப் பதிலாக பறையனாக பிறந்திருக்கலாம்" என்று கூறுகிறார். தலித் சமூகத்தை மறைமுகமாக இழிவுபடுத்தும் செங்குட்டுவன், அடிக்கடி கட்டப் பஞ்சாயத்துகளில் ஈடுபடுவதாகவும் இந்த வீடியோவை அவரது கட்சியை சேர்ந்த ஒருவரே வெளியிட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 

 வீடியோவில் வெளிப்படையாக தெரிந்த பொழுதும் இப்படி அவதூறாக பேசியதையும், அச்சுறுத்தியதையும் தி.மு.க எம்எல்ஏ மறுத்துள்ளார்.

 தனக்கும் அந்நிலத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் தன்னை பஞ்சாயத்து செய்த அழைத்ததாகவும் தெரிவித்திருக்கிறார். 

இதிலிருந்து தி.மு.க எம்எல்ஏ கெட்ட வார்த்தைகளையும் உபயோகப்படுத்தியும், தலித் சமூகத்தை அவமானப்படுத்தியும் பேசியிருக்கிறார். இந்த வீடியோவினால் நெட்டிசன்கள் தி.மு.கவை விமர்சித்து சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

 பலரும் தொல். திருமாவளவன் இந்த விஷயத்திற்கு கண்டனம் தெரிவிப்பாரா? அல்லது தோழமை சுட்டுதலாவது செய்வாரா? அல்லது  நமக்கு எதற்கு வம்பு என்று ஒதுங்கி இருந்து விடுவாரா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். 

 இவ்விவகாரம் குறித்து பா.ஜ.கவின் எஸ்சி பிரிவு தலைவரான டி ஆனந்தன், கிருஷ்ணகிரியில் மாவட்ட சூப்பிரண்டு காவலரிடம் புகார் அளித்துள்ளார். திமுக எம்எல்ஏ மீது, எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். 

Similar News