'இந்த அரசு வெட்கப்பட வேண்டும், நானே நன்னிலம் செல்கிறேன்' - நன்னிலம் இளைஞர் தற்கொலை விவகாரத்தில் சீறிய அண்ணாமலை

'தற்கொலை செய்துகொண்ட நன்னிலம் இளைஞனின் கனவுகளையும், வாழ்க்கையையும் பறித்த தி.மு.க அரசு அதற்கான விலையை கொடுக்க வேண்டும். அவருக்கு இரங்கல் தெரிவிக்க இன்று மாலை நான் நன்னிலம் செல்கிறேன்' என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Update: 2022-05-12 11:15 GMT

'தற்கொலை செய்துகொண்ட நன்னிலம் இளைஞனின் கனவுகளையும், வாழ்க்கையையும் பறித்த தி.மு.க அரசு அதற்கான விலையை கொடுக்க வேண்டும். அவருக்கு இரங்கல் தெரிவிக்க இன்று மாலை நான் நன்னிலம் செல்கிறேன்' என பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் லஞ்சம் கேட்டதால் மனமுடைந்து மணிகண்டன் என்கிற இளைஞன் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.


பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் அரசு தரும் பணத்தை பயனாளருக்கு வழங்க ஊழியர் லஞ்சம் கேட்ட வழக்கில் மனமுடைந்து மணிகண்டன் என்ற இளைஞர் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள கமுதகுடி கிராமத்தில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் இளைஞர் மணிகண்டன் என்பவர் வீடு ஒன்றை கட்டி வந்தார். பல்வேறு தவணைகளாக தொகையை பெற்று வீடு கட்டப்படும் நிலையில் திட்டத்தின் இரண்டாவது தவணை தொகையை விடுவிக்க நன்னிலம் ஒன்றிய பார்வையாளர் மகேஸ்வரன் லஞ்சம் கேட்டதாக புகார் கூறி பணத்தை கொடுக்க முடியாத விரக்தியில் விஷம் குடித்து தற்கொலை முயற்சி மேற்கொண்டனர் அதனைத் தொடர்ந்து சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

அவர் தற்கொலை செய்து கொள்ளும் முன்னர் பதிவிட்ட வீடியோ தற்போது இணையங்களில் வைரலாகி வருகிறது, 'அதில் கடன் வாங்கி நான் வீடு கட்டினேன். வீடு கட்டினால் தான் பணம் வரும் என அதிகாரி மகேஸ்வரன் கூறினால் அதனால் நான் கட்டினேன் ஒவ்வொரு முறையும் பணத்தை கேட்கும்போதும் 5,000 கொடு, 15,000 கொடு, 3000 கொடு என என்னிடம் பணத்தை வாங்கிக் கொண்டிருந்தார்! நான் நண்பர்களிடமும், நான் அயல்நாடு செல்ல வைத்திருந்த பணத்தையும் வைத்து வீடு கட்டினேன் முப்பத்தி ஆறு ஆயிரம் ரூபாய்க்கு கம்பி வாங்கி வீடு கட்டினேன் என்னால் அந்த படத்தை கொடுக்க முடியவில்லை எனக்கு வேற வழி தெரியல' என விரக்தியுடன் பேசும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.


இந்த நிலையில் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட அவரி வீடியோவை இணையத்தில் பதிவிட்டு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியிருப்பதாவது, 'நமது பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் கொடுத்த திட்டத்தை திட்டமிட்டு மறுப்பதற்காக தமிழக அரசு வெட்கி தலைகுனிய வேண்டும்.

இரங்கல் தெரிவிக்க இன்று மாலை நான் திருவாரூர் அருகே உள்ள நன்னிலம் செல்கிறேன். அந்த இளைஞனின் கனவுகளையும், வாழ்க்கையும் பறித்த தி.மு.க அரசு அதற்கான விலையை கொடுக்கும். சாமானியர்களின் துன்பங்களுக்கு செவிடாக ஊமையாக இருந்து பல உயிர்களை பறிக்க இந்த அரசை விட மாட்டோம்!' என ஆவேசமாக பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து இன்று மாலை திருவாரூர் மாவட்டம் நன்னிலம் செல்வார் அண்ணாமலை என எதிர்பார்க்கப்படுகிறது.


Source - Annamalai Tweet

Similar News