உதயநிதியின் பிரச்சாரம் ஒரு பொருட்டே இல்லை.. பாஜக தலைவர் எல்.முருகன்.!

உதயநிதியின் பிரச்சாரம் ஒரு பொருட்டே இல்லை.. பாஜக தலைவர் எல்.முருகன்.!

Update: 2020-11-27 15:36 GMT

உதயநிதி ஸ்டாலினின் பிரச்சாரத்தை நாங்கள் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில், வேல் யாத்திரை கடந்த 6ம் தேதி திருத்தணியில் முதன் முதலாக தொடங்கப்பட்டது. இந்த வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி வேல் யாத்திரையை நடத்திய பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.


இதனையடுத்து கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 100 நாள் பிரச்சாரம் என்று தொடங்கினார். இந்த பிரச்சாரத்தில் பல சர்ச்சைக்குரிய வார்த்தைகள் பேசினார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.


இந்நிலையில், இன்று டெல்லியில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழக சட்டமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து தலைமை முடிவு செய்யும். உதயநிதி ஸ்டாலினின் பிரச்சாரத்தை நாங்கள் ஒரு பொருட்டாக கருதவில்லை. வேல் யாத்திரைக்கு பெருகிய ஆதரவை பொறுத்துக்கொள்ள முடியாமல் தான் உதயநிதி பரப்புரையை ஆரம்பித்தார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சென்னை வருகையின் போது அதிமுக, பாஜக கூட்டணி தொடரும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Similar News