வணங்கி ஆசி பெற்று பட்டியலினத்தோரை நெகிழச் செய்த தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன்.!

வணங்கி ஆசி பெற்று பட்டியலினத்தோரை நெகிழச் செய்த தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன்.!

Update: 2020-11-21 07:30 GMT

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணித் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் திருமதி.வானதி ஸ்ரீநிவாசன் அவர்கள் டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்துக்குச் சென்று பதவியேற்பு நடைமுறைகளை நிறைவு செய்து விட்டு இன்று தமிழகம் திரும்பியுள்ளார். தமிழகத்துக்கு வந்த உடன் முதல் வேலையாக தனது சொந்த கிராமமான உலியம்பாளையத்திற்கு சென்று அங்குள்ள பட்டியலினத்தவர்களின் கோவிலில் வழிபாடு செய்தார்.

  ஏ.பி.வி.பியில் இணைந்து தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய வானதி சீனிவாசன், மக்களுடன் எளிதாகப் பழகும், அணுகும் குணத்தால் 33 வருடங்களாக கட்சிப் பணியாற்றி தமிழக பா.ஜ.க மாநில துணைத் தலைவர் என்ற நிலையை எட்டினார். அவரது திறமைக்கு மதிப்பளித்து பா.ஜ.க தலைமை அவரை தேசிய மகளிரணித் தலைவராக நியமித்தது.

இதையடுத்து டெல்லி சென்று பதவியேற்றுக் கொண்ட அவர், "கட்சியின் சாதாரண தொண்டரும் உயர்நிலைக்கு வர முடியும் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டு இருக்கிறது பாரதிய ஜனதா கட்சி" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் அது குறித்து பதிவிட்டார்.
 

 

பதவியேற்றுக் கொண்ட பிறகு இன்று டெல்லி திரும்பிய அவர் தனது பூர்வீகமான கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள உலியம்பாளையம் கிராமத்துக்குச் சென்று அங்குள்ள பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்களின் கோவிலில் வழிபட்டு அச்சமூகத்தைச் சேர்ந்தவர்களின் முன் விழுந்து வணங்கி ஆசி பெற்றார்.

தேசிய பொறுப்பு பெற்ற போதும் எளிமையாக நடந்து கொள்ளும் அவரது பண்பும் பட்டியலினத்தோருக்கு முதல் மரியாதை அளித்து அவர் சிறப்பித்ததும் அனைவரையும் நெகிழச் செய்திருக்கின்றன.

Similar News