பா.ஜ.க தலைவர் அண்ணாமலை இன்னும் காவல்துறை அதிகாரியாகவே இருக்கிறார் - பதறும் வீரமணி !
"முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனையிடுவது என்பது பழிவாங்கும் செயல் அல்ல, அவை ஆதரங்களோடு நடைபெற்றுள்ளதாக தெரிகிறது" என்றார்.
"பா.ஜ.க'வின் தமிழக தலைவர் அண்ணாமலை இன்னும் காவல்துறை அதிகாரியாகவே இருக்கிறார்" என பதறி பேட்டியறித்துள்ளார் திராவிடர் கழக தலைவர் வீரமணி.
நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக தஞ்சாவூர் வந்த திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் அப்போது அவர் கூறியதாவது, "முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனையிடுவது என்பது பழிவாங்கும் செயல் அல்ல, அவை ஆதரங்களோடு நடைபெற்றுள்ளதாக தெரிகிறது" என்றார்.
மேலும் பேசிய அவர், "பா.ஜ.க'வின் தமிழக தலைவர் அண்ணாமலை இன்னும் காவல்துறை அதிகாரியாகவே இருக்கிறார்,ஒரு பொறுப்பான கட்சியின் தலைவராக இன்னும் தன்னை மாற்றிக் கொள்ளவில்லை என்பதே, அவர் பேச்சுக்களிலிருந்து தமிழக மக்கள் உணர்ந்து கொள்ள முடிகிறது" என தெரிவித்தார்.