நாங்க பாதி மாவட்டத்தை கவர்ந்துவிட்டோம்.. மாஸ் காட்டும் எல்.முருகன்.!

நாங்க பாதி மாவட்டத்தை கவர்ந்துவிட்டோம்.. மாஸ் காட்டும் எல்.முருகன்.!

Update: 2020-12-18 18:55 GMT

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய பா.ஜ.க., மாநில தலைவர் எல். முருகன், பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரை வெற்றிவேல் யாத்திரையிலிருந்தே நாங்கள் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டோம்.

அதன் மூலமாக தமிழகத்தில் பாதி மாவட்டங்களை கவர்ந்து விட்டோம். தற்போது “பிரதமர் மோடி விவசாயிகளின் நண்பன்” என்ற திட்டத்தின் மூலம் சுற்றுப்பயணம் தொடங்கி நாளையில் இருந்து 3 நாட்கள் விவசாயிகளை சந்தித்து வேளாண் சட்டங்களில் உள்ள நன்மைகள் பற்றி விளக்கம் அளிக்க உள்ளோம்.

ரஜினியின் வருகை பற்றி சொல்ல வேண்டும் என்றால், யார் வேண்டுமானாலும் ஜனநாயக நாட்டில் கட்சி ஆரம்பிக்கலாம். அவர் தேசிய சிந்தனை உள்ளவர், அவர் கட்சி ஆரம்பித்த பின்னராக எனது கருத்தை கூறுகிறேன்.

கூட்டணிக் கணக்குகள் குறித்து எங்கள் தேசிய தலைமை எப்படி வழிகாட்டுகிறதோ அதன்படி செயல்படுவோம். வரும் நாட்களில் அது தெரியவரும் என்று கூறினார்.

Similar News