"மோடி நாட்டிலிருந்து ஒழியனுங்கிறதுக்காக எல்லாரும் பிரார்த்திப்போம்".. தி.மு.க., கூட்டத்தில் பாதிரியார் பேச்சு.!

"மோடி நாட்டிலிருந்து ஒழியனுங்கிறதுக்காக எல்லாரும் பிரார்த்திப்போம்".. தி.மு.க., கூட்டத்தில் பாதிரியார் பேச்சு.!

Update: 2020-12-19 14:21 GMT

தி.மு.கவின் மறைந்த தலைவர் கருணாநிதி மற்றும் தற்போதைய தலைவர் ஸ்டாலினுக்கு நெருக்கமான பாதிரியார் எஸ்.ரா., சற்குணம் பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கீழ்த்தரமாக பேசியும் அவரை நாட்டிலிருந்து ஒழிக்க பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தும் தி.மு.கவின் விவசாய சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உண்ணாநிலை அறப்போராட்டம் என்ற பெயரில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஏற்பாடு செய்த விவசாய சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பாதிரியார் எஸ்ரா சற்குணம்,

"அவர் நாட்டை கொள்ளை அடிக்க வந்தவர். அந்த வேலையை சரியாக செய்து கொண்டிருக்கிறார். 4 பணக்காரர்களை ஆதரிப்பது தான் அவரது கடமை. ஏழைகளைப் பற்றி அவருக்கு கவலையே இல்லை. கொஞ்சமாவது கடவுள் பயம் இருந்திருந்தால் மனசாட்சிக்கு விரோதமாக எதுவும் செய்ய மாட்டார். ஆனால் கடவுளைப் பற்றி தான் பேசுகிறாரே ஒழிய கடவுள் பயம் கூட கிடையாது. மனுஷர் பயமும் கிடையாது." 

 

 

"ஒரு மனுஷன் கல்யாணம் பண்ணா பொஞ்சாதி கூட அஞ்சாறு நாளாவது வாழ்ந்தால் தான் கஷ்ட நஷ்டம் தெரியும். கல்யாணம் கட்டி ஒரு வாரம் கூட பொஞ்சாதி கூட வாழக் கூடாதா? நாட்டை ஆள்வதற்கு உனக்கு என்ன தகுதி இருக்கிறது? அத்தகைய போலியான ஒரு ஆள் மோடி. மோடி இந்த நாட்டில் இருந்து அகற்றப்படும் வரை நமக்கு கஷ்ட நஷ்டங்கள் தொடரும். பிள்ளை, குட்டி கூட வாழ்ந்தால் தானே கஷ்ட நஷ்டம் பற்றி தெரியும் யாரோடு வாழ்ந்தாரோ தெரியவில்லை. மோடி இந்த நாட்டிலிருந்து ஒழியணுங்கிறதுக்காக நம்ம எல்லாம் பிரார்த்தனை செய்வோம்" இவ்வாறு பேசியுள்ளார்.

பாதிரியார் இவ்வாறு பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி கடும் விமர்சனத்தை சந்தித்து வருகிறது. பாதிரியாராக இருந்து கொண்டு தொடர்ந்து எஸ்ரா சற்குணம் அரசியல் பேசுவதையும், அரசியல் ரீதியாக பிரதமர் மோடியை எதிர்க்க முடியாமல் அவரது தனிப்பட்ட வாழ்வை கீழ்த்தரமாக விமர்சனம் செய்வதையும் சுட்டிக்காட்டி பலரும் பாதிரியாருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
 

 

இது முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் கவனத்துக்கு சென்ற நிலையில், "பிரதமரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து இவ்வளவு அதிகமாக பேசியதிலிருந்து இவர்கள் அரசியல் ரீதியாக பாஜகவை எதிர்க்கத் திராணியற்ற அவர்கள் என்று தெரிகிறது" என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

 

பாதிரியார் எஸ்ரா சற்குணம் சில நாட்களுக்கு முன்பு கொரோனா ஊரடங்கால் ஆறு மாதங்களாக புதிதாக எவருக்கும் ஞானஸ்தானம் செய்யப்படவில்லை என்றும் புதிதாக சர்ச்சுகள் திறக்கப்படவில்லை என்றும் வெளிப்படையாக மதமாற்ற செயல்பாடுகள் சரிவைச் சந்தித்ததை பற்றி வருத்தம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Similar News