என்னது மூன்றாம் கலைஞர் தாக்கப்பட்டாரா? உதயநிதி முகத்தில் மனுவை வீசியெறிந்த தொண்டர்!

என்னது மூன்றாம் கலைஞர் தாக்கப்பட்டாரா? உதயநிதி முகத்தில் மனுவை வீசியெறிந்த தொண்டர்!

Update: 2020-12-23 08:43 GMT

காலி நாற்காலிகளை பார்த்து பேசி விரக்தியடைந்த உதயநிதி பாதியில் கூட்டத்தை முடித்துக்கொண்டு ஓடிய சம்பவம் நேற்று நடந்துள்ளது. சிதம்பரத்தில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில், அவர் பேச ஆரம்பித்ததும் கட்சி தொண்டர்களே வெளியேறியதால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

முக ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக திமுகவை யார் ஆள வேண்டும் என்பதற்கான அனைத்து வேலைகளும் அப்பட்டமாக நடந்து வருகிறது. இதற்காக, உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞரணி செயலாளர் பொறுப்பு கொடுக்கப்பட்டது.

ஆனால், இந்தப் பொறுப்பை வைத்துக் கொண்ட கட்சியின் செயல் தலைவர் போல, செல்லும் இடங்களில் எல்லாம், சீனியர் தலைவர்களை விட கூடுதல் மரியாதையும், அதிகாரமும் அவருக்கு வழங்கப்பட்டது.

கட்சியின் முக்கியக் கூட்டங்களில் வைக்கப்படும் பேனர்களில் கூட பெரியார், அண்ணா, கருணாநிதி, ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக, உதயநிதி ஸ்டாலினின் புகைப்படமும் இடம்பெற்று வந்தது. இது கட்சியில் உள்ள மூத்த தலைவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி வந்தது.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் திமுக சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில், உதயநிதி ஸ்டாலின் கலந்துக் கொண்டார். உதயநிதி பேச ஆரம்பித்ததும் கூட்டம் கலைய தொடங்கியது. ஒரு கட்டத்தில் பாதி பேர் சென்றுவிட்டதால், காலி நாற்காலிகள் மட்டுமே காட்சியளித்தன.

கூட்டம் கலைந்ததால் பாதியிலேயே தனது பேச்சை முடித்துக் கொண்டு உதயநிதி கிளம்ப முயன்றார். அப்போது மேடை முன் கூடியிருந்த தொண்டர்கள் சிலர் கோரிக்கை மனுக்களை வழங்க முயற்சித்தனர்.

ஆனால் கைகுலுக்குவதிலேயே உதயநிதி குறியாக இருந்ததால், விரக்தியடைந்த தொண்டர் ஒருவர், தனது மனுவை உதயநிதியின் முகத்தில் வீசியெறிந்தால். இதனால் கோபமடைந்த உதயநிதி உடனடியாக அங்கிருந்து வெளியேறினார்.

ஏற்கனவே மூத்த தலைவர்கள் இருக்கும் போது, 2021 சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரத்தை கூட, உதயநிதி ஸ்டாலினே தொடங்கினார். இதனால், திமுகவில் உட்கட்சி பூசல் தலைதூக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Similar News