தமிழகத்தில் எப்போது சட்டமன்ற தேர்தல்? தலைமை தேர்தல் அதிகாரிகள் என்ன சொல்கிறார்கள்.!

தமிழகத்தில் எப்போது சட்டமன்ற தேர்தல்? தலைமை தேர்தல் அதிகாரிகள் என்ன சொல்கிறார்கள்.!

Update: 2020-11-19 09:34 GMT

தமிழகத்தில் சரியான நேரத்தில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், கொரோனாவுக்கு மத்தியில் பீகார் தேர்தல் பணிகளை தொடங்கியபோது, இது மடத்தனம் என சிலர் நினைத்தனர். ஆனால் அதனை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளோம் என்றார்.

தேர்தல் என்பது வழக்கமாக நடைபெறும் ஒரு நடைமுறை. அந்த விஷயத்தில் நாங்கள் ஒருபோதும் ஓய்ந்திருக்க மாட்டோம் எனக் கூறிய சுனில் அரோரா, தமிழகம், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்கான தேர்தல், அடுத்த வருடம் சரியான நேரத்தில் நடைபெறும் என கூறியுள்ளார்.

இந்நிலையில், தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு குறித்து இன்று சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. 2021ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் கடந்த 16ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ வெளியிட்டார். அத்துடன் இந்த வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, நீக்குவது, திருத்தம் செய்வது போன்ற வாக்காளர்கள் டிசம்பர் 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அவர் அறிவித்தார்.

இந்நிலையில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ இன்று ஆலோசனை நடத்துகிறார். வாக்காளர் பட்டியலில் சரிபார்ப்புக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளுடன் சத்யபிரதா சாஹூ இன்று ஆலோசனையில் ஈடுபடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News