பதவிக்காக திமுகவிடம் மண்டியிட்டது யார்.. ஜோதிமணியை காய்ச்சி எடுத்த அதிமுக ஐடிவிங்.!

பதவிக்காக திமுகவிடம் மண்டியிட்டது யார்.. ஜோதிமணியை காய்ச்சி எடுத்த அதிமுக ஐடிவிங்.!

Update: 2020-12-05 13:27 GMT

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இவரது நினைவு நாளுக்கு பல்வேறு அரசியல் தலைவர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


அதே போன்று காங்கிரஸ் எம்.பி., ஜோதிமணி கூறியதாவது: ஜெயலலிதாவின் அரசியலோடு வேறுபடலாம். ஆனால் ஒருபெண்ணாக அவர் கடந்து வந்த பாதை, சந்தித்த போராட்டங்கள் சாதாரணமானதல்ல. எல்லாவற்றையும் தாண்டி ஆணாதிக்கம் நிறைந்த அரசியல் சூழலில் ஒரு வெற்றிகரமான தலைவரானவர். அவரில்லாத அதிமுக, பிஜேபிக்கு அடிமையாகிவிட்ட சூழலில் அவரது இழப்பு அதிகம் தெரிகிறது என்று தெரிவித்திருந்தார்.


மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 4ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஜோதிமணி இவ்வாறு கூறியதற்கு, ஜெயலலிதாவை பெருமையாக சொன்னதற்காக அதிமுகவினர் பலரும் நன்றி தெரிவித்து வருகின்றனர். அதே சமயம், அவரில்லாத அதிமுக பிஜேபிக்கு அடிமையாகிவிட்ட சூழலில் அவரது இழப்பு அதிகம் தெரிகிறது என்று சொன்னதை அதிமுக ஐடி விங் விடவில்லை.

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தமிழகத்தில் காங்கிரசுக்கு வாக்கும் இல்லை, ஒரு வங்கியும் இல்லை என்று கடுமையான வார்த்தையால் கூறியிருந்தார். அப்படி இருந்தும் திமுவிடம் மண்டியிட்டு பதவிக்காக காமராஜர் கட்டிக்காத்த தன்மானத்தை காற்றில் பறக்க விட்டிர்களே அது தான் அடிமைத்தனம் என்றும், எப்படி நீங்க இத்தாலி நாட்டுக்காரரான சோனியாவுக்கு அடிமையானது மாதிரியா? என்றும், நீங்க (காங்கிரஸ்) திமுகவிடம் அடிமையாகி பல ஆண்டுகள் கடந்து விட்டது.

முடிந்தால் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் 75 சீட் வாங்குங்க. நீங்க அடிமை இல்லைனு நாங்கள் ஒப்புக்கொள்கிறோம் என்று கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.

Similar News