யாருடன் கூட்டணி.. பா.ம.க. 25ம் தேதி அவசர நிர்வாக குழு கூட்டம்.!

யாருடன் கூட்டணி.. பா.ம.க. 25ம் தேதி அவசர நிர்வாக குழு கூட்டம்.!

Update: 2021-01-23 07:55 GMT

வன்னியர் சமுதாயத்தினருக்கு அரசு வேலை வாய்ப்பில் 20 சதவீத உள் ஒதுக்கீடு வேண்டும் என பாமக நிறுவனம் டாக்டர் ராமதாஸ் கடந்த ஒரு மாதமாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார். இதனிடையே தற்போது இருக்கின்ற அ.தி.மு.க. கூட்டணியில் இருக்கும் பா.ம.க. வருகின்ற தேர்தலுக்கு முன்பாகவே இடஒதுக்கீடு குறித்து அறிவிப்பு வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள.

ஆனால், இதுவரை தமிழக அரசு எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது. அப்படி தனிஇடஒதுக்கீடு தரவில்லை என்றால் வன்னியர்களுக்கு என உள்ஒதுக்கீடு தந்தாலும் அதனை ஏற்றுக்கொள்வதாக ராமதாஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த முடிவை அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி மற்றும் அன்பழகன் ஆகியோரிடமும் தெரிவித்தார்.

ஆனால் இதுவரை எந்த முடிவும் எட்டப்படாததால், வருகின்ற 25ம் தேதி பா.ம.க. அவசர நிர்வாக குழு கூட்டம் இணையவழி மூலமாக நடத்தி, அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகும் முடிவை அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அப்படி பா.ம.க. வெளியேறினால், தி.மு.க. கூட்டணிக்குத்தான் செல்ல வேண்டும் என்று தெரிகிறது. இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
 

Similar News