"15 வயதிலேயே பெண்கள் தாயாகலாம்..எதற்காக திருமண வயது 21?" காங்கிரஸ் தலைவரின் சர்ச்சைப் பேச்சு.!

"15 வயதிலேயே பெண்கள் தாயாகலாம்..எதற்காக திருமண வயது 21?" காங்கிரஸ் தலைவரின் சர்ச்சைப் பேச்சு.!

Update: 2021-01-14 06:40 GMT

பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் பெண்களின் திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்துவதற்கு  ஆலோசனை வழங்க ஒரு கமிட்டியை அமைத்து இருப்பதாகவும், அங்கிருந்து தகவல்கள் வந்தவுடன் இது தொடர்பான முடிவு எடுக்கவேண்டும் என்றும் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் 75வது ஆண்டு விழாவில் பங்கேற்று பேசினார்.

 பிரதமர் மேலும் கூறுகையில் நாட்டில் முதல் முறையாக சிறுமிகளின் கல்வி சேர்க்கை பையன்களை விட அதிகமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

 இதற்கு பிறகு, இது குறித்து பேசிய மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆண்களுக்கு 21 வயது திருமண வயதாக இருக்கும் பட்சத்தில் பெண்கள் மட்டும் ஏன் 18 வயதிலேயே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று பேசினார். 

அவர் பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் கௌரவத்தை அதிகப்படுத்த வேண்டும் என்ற 'சம்மான்' பிரச்சாரத்தின் துவக்க விழாவில் இது குறித்து பேசினார். 

அவர் மேலும் கூறுகையில் இது குறித்து ஒரு பொது விவகாரமாக ஆக்கி மக்கள் இதைப் பற்றி விவாதம் புரிய வேண்டும் என்று தெரிவித்தார். மத்திய பிரதேசத்தில் பெண்களின் பாதுகாப்பு  குறித்து பேசிய முதல்வர், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தனது ஆட்சிக்காலத்தில் குறைந்து விட்டதாக தெரிவித்தார். மேலும் 7,100 காணாமல்போன பெண்கள், சிறுமிகள் கண்டறியப்பட்டு தங்களுடைய குடும்பத்தாரிடம் சேர்த்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தொலைந்துபோன மற்ற குழந்தைகளைப் பற்றிய தேடுதல் இருப்பதாகவும் கூறினார். 

 இதுகுறித்து கடும் தாக்குதலை வெளியிட்டுள்ள காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் சிங் வர்மா, "மருத்துவர்களை பொருத்தவரை ஒரு சிறுமி பதினைந்து வயதிலேயே தாய் ஆகலாம். எனவே எந்த அடிப்படையில் ஒரு பெண்ணின் திருமண வயது 18 லிருந்து 21 ஆக அதிகரிக்க வேண்டும் மத்திய பிரதேச முதல்வர் கூறுகிறார்" என்று கேள்வி எழுப்பினார்.  

இது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி அந்த காங்கிரஸ் தலைவருக்கு கடும் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. இதுதான் பெண்ணுரிமையை காக்கும் வழியா என்று பல சமூக ஊடக பயனர்களும் பிரியங்கா காந்தியையும் டேக் செய்து கேள்வி எழுப்பி வருகின்றனர். 

எந்த மருத்துவரும் இவ்வாறு கூறவில்லை என்று கூறும் சமூக ஊடக பயனாளர்கள், பெண்களின் திருமண வயதை அதிகரிப்பது அவர்களுக்கு நல்ல கல்வியையும் வெளி உலக அனுபவத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும் என்றும் இதுகுறித்து காங்கிரஸ் இவ்வளவு மோசமாக கருத்து கூற வேண்டிய அவசியமில்லை என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது இஸ்லாமின் ஷரியா சட்டத்தை ஒட்டி வரும் கருத்தா என்றும் சிலர் காட்டமாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Similar News