புதுச்சேரி: 700 கோடியில் குழாய்கள் மூலம் வீடுகளுக்கு சமையல் கேஸ் இணைப்பு...

Update: 2023-09-09 13:30 GMT

புதுச்சேரி மாநிலத்தில் ரூ.700 கோடியில் குழாய் மூலம் வீடுகளுக்கு கியாஸ் இணைப்பு விரைவில் அமல்படுத்தப்படுகிறது. வீடுகள், வணிக பயன்பாடு, தொழில்கள் மற்றும் போக்குவரத்துக்கும் கியாஸ் பயன்படுத்த திட்டம் வகுக்கப் பட்டுள்ளது. சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் குழாய்கள் மூலம் சமையல் கேஸ் இணைப்பு திட்டம் வெளிநாடுகள் மட்டுமின்றி மும்பை டெல்லி மற்றும் தமிழகத்தின் நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் தற்போது வரை செயல்பாட்டில் உள்ளது.


அந்த வகையில் புதுச்சேரி மாவட்டத்திலும் வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ் இணைப்பு வழங்கும் திட்டம் தொடங்கப்பட ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் புதுவை அரசு தொழில் மற்றும் வணிகத்துறை புதுவை நகர எரிவாயு வினியோக கொள்கை -2023 திட்டத்தின்கீழ் வீடுகளுக்கு குழாய் மூலம் சமையல் கியாஸ் இணைப்புக்கான வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது.


இதில், புதுச்சேரி மாநிலத்தில் புதுவை, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் ஆகிய பிராந்தியங்களில் ரூ.700 கோடியில் இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாது தற்போது தான் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் கேஸ் சிலிண்டர் விலையை 200 ஆக குறைத்து அறிவித்தது. புதுச்சேரி அரசாங்கம் 500 ரூபாயாக கேஸ் சிலிண்டர் விலகி குறைத்தது இந்நிலையில் குழாய்கள் மூலம் கேஸ் வழங்கும் திட்டம் மக்களிடையே வரவேற்பு பெற்று இருக்கிறது

Input & Image courtesy: News

Tags:    

Similar News