புதுச்சேரி: 300 ஆண்டுகள் பழமையான கோவில் சிலைகள் மீட்க நடவடிக்கை!

2 சாமி சிலைகளை மீட்டுத்தர வேண்டும் என்று போலீசில் புகார்.

Update: 2022-11-21 02:06 GMT

காரைக்கால் அடுத்து உள்ள மேல காசாகுடி கிராமத்தில் புதுச்சேரி இந்து சமநிலைய அறநிலையத்துறைக்கு சொந்தமான நாக சுவாமி தேவஸ்தானம் அமைந்துள்ளது. இந்த தேவஸ்தானத்தில் வரதராஜர் பெருமாள் கோவில் உள்ளது இந்த கோவில் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. கடந்த 1963 ஆம் ஆண்டு இந்த கோவிலில் விலை உயர்ந்த நரசிம்மர், பஞ்சமுக ஆஞ்சநேயர் ஐம்பொன் சிலைகளை மர்ம நபர்கள் திருடி சென்று இருக்கிறார்கள். ஆனால் தற்போது வரை இந்த சிலை கிடைக்கப் பெறவில்லை.


இதுகுறித்து கிராம நிர்வாகிகள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கப்பதிவு செய்து திருடப்பட்ட சிலைகள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சுமார் 60 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இந்த அமெரிக்காவில் இருப்பது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து அமெரிக்கவில் உள்ள சிலைகளை மீட்டு தருமாறு கோவில் நிர்வாகம் மற்றும் புதுச்சேரி இந்த அறநிலைத்துறை சார்பில் காவல்துறை தலைமையகத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்டது.


இதை தொடர்ந்து அரசின் அதிரடி உத்தரவின் பெயரில் காரைக்கால் மாவட்ட போலீஸ் சுப்பிரமணியம் சுப்பிரமணியன் அவர்கள் நேற்று முன்தினம் சம்பந்தப்பட்ட கோவிலுக்கு சென்று நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகளுடன் சந்திப்பு நடத்தினார்கள். விசாரணை அறிக்கை இந்த சமநிலையத்துறைக்கு காவல் துறையினர் அனுப்பி வைத்தார்கள், மீட்கப்படும் என்று உறுதி அளித்து இருக்கிறார்கள்.

Input & Image courtesy: Thanthi News

Tags:    

Similar News