ஆயிரம் ஆண்டுகள் பழமையான குற்றாலநாதர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனை விழா.!

ஆயிரம் ஆண்டுகள் பழமையான குற்றாலநாதர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனை விழா.!

Update: 2020-12-30 12:16 GMT

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையானதும் பிரசித்தி பெற்ற தலமான குற்றாலநாதர் ஆலயம் அமைந்துள்ளது.

இந்த சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் 16 வகை முலிகை பொருட்களான திரவியம், தேன், பால், தயிர், சந்தனம், உள்ளிட்டவைகளை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க கடந்த 21ம் தேதி ஆருத்ரா தரிசன திருவிழாவிற்க்கு கொடியேற்றம் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று அதிகாலை நடராஜ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பின்னர் அலங்கரிக்கப்பட்ட நடராஜர்க்கு ஆனந்த பைரவி நாதஸ்வர இசையில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதணை குற்றாலநாதர் ஆலயத்தில் உள்ள திரிகூட மாடத்தில் நடைபெறுகிறது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் பெற்று வருகின்றனர். இந்த விழா ஆண்டுதோறும் திருக்கோயில் வெளிபிரகாரத்தில் வெகு விமர்சையாக நடைபெறும் இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக கோவில் உள் வாளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தென்காசி மாவட்டம் மட்டுமின்றி திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்தும் ஏராளமானோர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News