தீராத வியாதிகளை தீர்க்க ஆயுர்வேதம் சொல்லும் எளிமையான அதிசய வழிகள் சில!

தீராத வியாதிகளை தீர்க்க ஆயுர்வேதம் சொல்லும் எளிமையான அதிசய வழிகள் சில!

Update: 2020-10-26 07:59 GMT

வரும் முன் காப்போம். இதை பல்லாயிரம் முறை கேட்டிருப்போம். ஆனால் இந்த வார்த்தைகளுக்கான ஆயுர்வேத பார்வை என்பது என்ன? இந்தியில் ஒரு வாக்கியம் உண்டு. "ஸ்வஸ்த் சே ஸ்வஸ்திய ரக்‌ஷன்ன் " என்றால் ஆரோக்கியமான மனிதரின் ஆரோக்கியத்தை காப்பது என்று பொருள். இதுவே ஆயுர்வேதத்தில் வரும் முன் காப்போம் என்பதற்கான பொருள்.

மிக எளிமையான மற்றும் நடைமுறைக்கு சாத்தியமான சில வழிகள்

ஒவ்வொறு மனிதரும் ஒவ்வொரு விதத்தில் தனித்துவம் மிக்கவர் என்பதை ஆயுர்வேதம் உணர்த்துகிறது. ஒவ்வொறு மனிதருக்கென்று தனித்துவமான உடலமைப்பு உண்டு. அதனாலேயே மனிதருக்கு மனிதருக்கு வரும் முன் காப்பது என்கிற வாக்கியத்தின் அர்த்தம் மாறுபடும். நீங்கள் வெப்பம் நிறைந்த மனிதராக மற்றும் பித்தம் அதீதமாக உள்ள மனிதராக இருந்தால் பித்தம் நிறைந்த உணவுகளை உட்கொள்வதை தவிருங்கள். அல்லது பித்தத்தை அதிகரிக்கும் எந்தவொரு செயலையும் செய்யாமல் இருங்கள்.

உங்கல் உடல் இயல்பின் படியே உங்கள் வாழ்க்கை முறையும் உணவு முறையும் இருக்க வேண்டும். உங்கள் தொழில்வாழ்க்கையையும் உங்கள் உடலின் இயல்பு படியே தேர்வு செய்ய முடிந்தால் மேலும் சிறப்பானது. இவ்வாறு செய்வதொன்றே நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

நச்சுத்தன்மையை இயற்கையான முறையில் நீக்குவது.

உதாரணமாக, குளிர்காலத்தில் இயற்கையாகவே கப தோஷம் அதிகரிக்கும். அக்காலத்தில் கபம் அல்லது சளி அதிகரிக்காத உணவுகளாக நாம் தேர்வு செய்ய வேண்டும். ஆயுர்வேதத்தில் வரும் முன் காப்ப்பது என்பது மிக எளிமையான மற்றும் நடைமுறைக்கு சாத்தியமான ஒன்று. நீங்கள் சற்று விழிப்புடனும், புத்திசாலித்தனத்துடனும் இருக்க வேண்டும். வரும் முன் காப்பதில் முக்கியமான ஒன்றாக கருதப்படுவது உடலை சுத்தமாக வைத்திருப்பது. குறிப்பாக உடலின் கழிவுகள் வெளியேறுவது மிகவும் அவசியமானது. வியர்வை மூலமாக அதிக கழிவுகள் வெளியேறுவதால் முடிந்தவரை இயற்கை சூழலில் இருக்க பழகுங்கள்.

ஆற்றலை செலவழிக்காமல் உடல்பயிற்சி செய்யுங்கள்.

ஆயுர்வேத த்தில் உடற்பயிற்சி செய்யும் போது பாதி ஆற்றலை மட்டும் உபயோகிக்குமாறு அறிவுருத்துகிறது. இந்நாளில் அதிகமானவர்கள் உடற்பயிற்சி கூடத்தில் கடினமான உடற்பயிற்சிகளை செய்து சோர்ந்து போகிறார்கள். ஆயுர்வேத த்தில் சொல்லியபடி உடற்பயிற்சி என்பது உற்சாக அளிக்க கூடியதாக இருக்க வேண்டும்.

Similar News