தருமபுரி: அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் கோபால்சுவாமி.. முத்தம்பட்டி ஆஞ்சநேய சுவாமி.!

இன்று அமாவாசையை முன்னிட்டு, கோபால்சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Update: 2021-04-11 12:25 GMT

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே உள்ள மலையூர் கிராமத்தில் அமைந்துள்ளது கோபால் சுவாமி திருக்கோயில். இக்கோயிலில் வருடம் தோறும் புரட்டாசி மாதம் திருவிழா வெகுவிமர்சையாக கொண்டாடப்படும். இந்த கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி கர்நாடக மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிவார்கள்.




 


இந்நிலையில், இன்று அமாவாசையை முன்னிட்டு, கோபால்சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இன்று ஏராளமானோர்கள் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

அதே போன்று தருமபுரி டூ தொப்பூர் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ளது முத்தம்பட்டி, அங்கு ஆஞ்சநேய சுவாமி திருக்கோயில் உள்ளது. இன்று அமாவாசையை முன்னிட்டு ஆஞ்சநேய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். இதனை ஏராளமான பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்தனர்.


 



அனைத்து பக்தர்களும் முககவசம் அணிந்து சென்ற பின்னரே கோயிலுக்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Similar News