நூறு கிலோ தங்கத்தால் வேயப்பட்ட கோபுரம் - அம்ரிஸ்டர் தங்ககோவிலின் ஆச்சர்ய தகவல்கள்!

நூறு கிலோ தங்கத்தால் வேயப்பட்ட கோபுரம் - அம்ரிஸ்டர் தங்ககோவிலின் ஆச்சர்ய தகவல்கள்!

Update: 2020-10-19 07:00 GMT

ஹர்மிந்தர் சாஹிப் அல்லது தர்பார் சாஹிப் என்பது கோவில் பெயர். ஆனால் இந்த நிஜ பெயரை சொன்னால் பெரும்பாலனவர்களுக்கு இது எந்த கோவில் என தெரியாது. இதன் செல்லப் பெயர் சொன்னால் இந்த கோவிலின் புகழ் உலகத்திற்கே தெரியும்.

இந்த கோவில் மற்றொரு பெயர் அம்ரிஸ்டர் தங்க கோவில். சிக் பிரிவினரின் முக்கிய தலம். இந்த தலம் பஞ்சாப் மாநிலத்தில் அம்ரிஸ்டர் பகுதியில் அமைந்துள்ளது. இந்த நகரம் 1574 ஆம் ஆண்டில் தோன்றியது . இதை தோற்றுவித்தவர் நான்காம் சீக்கிய குரு, குரு ராம தாஸ்.

ஐந்தாம் சீக்கிய குருவான அர்ஜன் தேவ் அவர்கள் இந்த நகரத்தில் ஒரு கோவிலை நிர்மாணிக்க விரும்பினர். அதன்படி 1588 இக்கோவிலை கட்ட திட்டமிட்டார். அம்ரிஸ்டர் நகரத்தின் மைய பகுதியில் திட்டமிடப்பட்ட இந்த கோவில் அனைத்து இனத்தவருக்கும், அனைத்து மதத்தவருக்கும் பொதுவானதாக இருக்குமாறு வடிவமைக்கப்பட்டது.

இந்த திட்டமிடல்ல், அர்ஜன் தேவ் அவர்கள் தன்னுடன் இஸ்லாமிய நண்பரான மியன் மிர் அவர்களை இணைத்து கொண்டார். இதன் மூலம் ஒரு மத நல்லிணக்கம் ஏற்படும் என்பது அவருடைய நம்பிக்கையாக இருந்தது மற்றும் 11 நூற்றாண்டில் உருவாகியிருந்த சமய சிக்கல்களை தீர்க்க இது ஒரு வழியாக இருக்குமென அவர் கருதினார்.

இந்த குருத்வாரா கோவில் வெள்ளை மார்பிள் கற்களால் கட்டப்பட்டது. அதன் மீது தங்க இழை வேயப்பட்டுள்ளது. 19 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் 100 கிலோ தங்கம் தாமரை வடிவிலான கோபுரத்திற்கு வேயப்பட்டது அதனை சுற்றி அலங்கார மார்பிள் கற்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த கோவிலை சுற்றி அமைக்கப்பட்டுள்ள புனித குளம் அம்ரித் சரோவர் என அழைக்கப்படுகிறது. இந்த கோவிலுக்கு வருகிற பக்தர்கள் இந்த புனித குளத்தில் மூழ்கி எழுவது வழக்கம். இந்த குளத்தில் குளித்து பின் இறைவனை வணங்குவது தங்களின் ஆன்மீக பயணத்திற்கு ஏதுவானது சீக்கியர்கள் கருதுகின்றனர். மேலும் இந்த நீருக்கு,நோய்களை குணப்படுத்தும் வலிமை இருக்கிறது என்பது நம்பிக்கை.

இந்த கோவிலின் மற்றொரு ஆச்சர்யம் இங்கு வழங்கப்படும் அன்னதானம். ஒரு நாளிற்கு ஒரு இலட்சம் மேற்பட்டோருக்கு இங்கு உணவு அளிக்கப்படுகிறது. சிறப்பு வழிபாடு மற்றும் பண்டிகை நாட்களில் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாகி நம்மை ஆச்சர்யமூட்டுகிறது.

இந்த அன்னதான கூடத்தில் அனைவரும் தரையில் அமர்ந்து தான் உண்ண வேண்டும் இங்கு மத, இன, சாதி வேறுபாடுகள் எல்லாம் கிடையாது. அனைவரும் சமமாக அமர்ந்து தான் உண்ண வேண்டும். அந்த சம உணர்வை வளர்ப்பதே இந்த பந்தியின் நோக்கமாக இருக்கிறது.

Similar News